மாவட்டங்கள்

img

துப்புரவு பணியாளர்களுக்கு சிறப்பு காலமுறை ஊதியம் வழங்கிடுக

தருமபுரி, ஜூலை 19- நூலகத்துறையில் பகுதிநேர துப்புரவு பணியாளர்களுக்கு சிறப்பு காலமுறை ஊதியம் வழங்க வேண் டும் என  வலியுறுத்தி தமிழ்நாடு அரசு பொது நூலகத்துறை அலுவலர் சங்கம் சார்பில் தருமபுரியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 7 வது ஊதியக்குழு பரிந்துரை அரசாணைப்படி, தொகுப்பூதியம் பெறும் பகுதிநேர துப்புரவு பணியாளர் களுக்கு சிறப்பு காலமுறை ஊதியம் நிர்ணயம் செய்து நிலுவை தொகை வழங்க வேண்டும். 8 வது ஊதியக்குழு பரிந்துரையின்படி சிறப்பு காலமுறை ஊதியம் பெறும் பகுதிநேர கூட்டு நர்களுக்கு திருத்திய ஊதியம் நிர் ணயம் செய்து நிலுவை தொகை வழங்க வேண்டும். 2013-14 ஆம் ஆண்டில் சமூக பொருளாதார திட்டத் தில் கட்டப்பட்ட 10 நூலக கட்டிடங் களை துறையின் கீழ் கொண்டு வந்து நூலகங்கள் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அலுவலக குளறு படியினால் 3 ஆம் நிலை நூலகர் களுக்கு  2019 ஆம் ஆண்டு ஜனவரி 8 ஆம் தேதியன்று பிடித்தம் செய்யப் பட்ட ஊதியத்தை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக் கைகளை வலியுறுத்தி வெள்ளியன்று தமிழ்நாடு அரசு பொது நூலகத்துறை அலுவலர் சங்கம் சார்பில் தருமபுரி மாவட்ட நூலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத் தின் மாவட்ட தலைவர் மு.முனிராஜ் தலைமை வகித்தார். மாவட்ட செய லாளர் பெ.பிரபாகரன், மாவட்ட இணை செயலாளர்கள் எம்.குமரன், வி.கோவிந்தசாமி, மாவட்ட துணைத் தலைவர்கள்  எம்.ஜாகீர் உசேன், கே. ராமச்சந்திரன், சி.மாதையன், ஆகி யோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர். அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் எம்.சுருளிநாதன், மாவட்ட பொருளாளர் கே.புகழேந்தி, மாவட்ட மகளிர் அணி துணை அமைப்பாளர் பி.எஸ்.இளவேணில், வேளாண்மைத் துறை அமைச்சு பணியாளர் சங்க  மாநில துணைத் தலைவர் எம்.யோக ராசு, கூட்டுறவுத்துறை ஊழியர் சங்க மாவட்ட தலைவர் ஜி.பழனியம்மாள், சத்துணவுத்துறை ஊழியர் சங்க மாவட்ட தலைவர் சி.எம்.நெடுஞ் செழியன்  ஆகியோர் வாழ்த்தி பேசினர். முடிவில் பொதுநூலகத்துறை அலுவலர் சங்க மாவட்ட பொருளாளர் எஸ்.சரவணகுமார் நன்றி கூறினார்.

;