வியாழன், அக்டோபர் 1, 2020

மாவட்டங்கள்

புதுச்சேரி மாணவர்களுக்கு... அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் மே 15 வரை விண்ணப்பிக்கலாம்

புதுவை மாநில அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் உள்ள 2,326 இடங்களுக்கு வருகிற 15 -ஆம் தேதி வரை இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். புதுவை மாநிலத்தில் லாசுப்பேட்டை மோதிலால் நேரு அரசு பாலிடெக்னிக் கல்லூரி, லாசுப்பேட்டை அரசு மகளிர் பாலிடெக்னிக் கல்லூரி, வரிச்சிக்குடி காரைக்கால் பாலிடெக்னிக் கல்லூரி, காரைக்கால் மேடு மகளிர் பாலிடெக்னிக் கல்லூரி, ஏனாம் டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் பாலிடெக்னிக் கல்லூரி, மாஹே இந்திரா காந்தி பாலிடெக்னிக் கல்லூரி என 6 அரசு பாலிடெக்னிக் கல்லூரிகள் உள்ளன.தற்போது இந்த 6 அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் உள்ள 2,326 இடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதில், வழக்கமான இடங்கள் 1,372, பிளஸ் 2, ஐடிஐ முடித்துவிட்டு சேரும் மாணவர்களுக்கான லேட்டரல் நுழைவுக்கான இடங்கள் 809, மாற்றுத் திறனாளிகளுக்கான இடங்கள் 25, பகுதி நேர படிப்புக்கான இடங்கள் 120 உள்ளன.இந்த இடங்களுக்கு மாணவர்கள் மே 15 -ஆம் தேதி வரை இணையதளம் மூலமாக விண்ணப்பிக்கலாம். கடந்தாண்டைப் போலவே நிகழாண்டும் இணையதளம் மூலம் கலந்தாய்வு நடத்தப்படும்.

;