மாவட்டங்கள்

ஈரோடு முக்கிய செய்திகள்

பொது சுத்திகரிப்பு நிலையம்:கிராம மக்கள் எதிர்ப்பு

ஈரோடு, ஜூலை 19- பவானியில் விதிமுறைகளை மீறி,  பொது சுத்திகரிப்பு நிலையம் அமைப்ப தற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்புத் தெரிவித் துள்ளனர். பவானி ஒன்றியம், ஆண்டிகுளம், தொட் டிபாளையம் ஊராட்சி பகுதியில் காடை யம்பட்டி, செங்காடு, குளத்துதோட்டம், புது காடையம்பட்டி போன்ற பகுதிகளில் ஏராள மான சாயப்பட்டறைகள் செயல்படுகிறது. இந்த பட்டறைகளில் இருந்து சுத்திகரிப்பு செய்யாமல் கழிவு நீர் வெளியேற்றப்படு கிறது. இந்நிலையில், தமிழக அரசின் பங்க ளிப்புடன் பொது சுத்திகரிப்பு நிலையம் அமைக்க, சாயப்பட்டறை உரிமையாளர் கள் இடம் தேர்வு செய்து கட்டுமான பணி களுக்கு ஆயத்தமாகி வருகின்றனர். இதற்காக தேர்வு செய்யப்பட்ட இடம், குடியிருப்புகள், பள்ளிகள், விவசாய விளை நிலங்கள், நீர் நிலைகள் உள்ள இடமாகும். அரசு மற்றும் நீதிமன்றம் வகுத்துள்ள விதியை மீறி, பொது சுத்திகரிப்பு நிலையம் அமைக்கக்கூடாது. இதனால், சுற்றுச் சூழல் கடுமையாக பாதிக்கும் நிலை உள்ள தால், மாற்று இடத்தில் பொது சுத்திகரிப்பு நிலையம் அமைக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அப்ப குதி மக்கள் புகார் செய்தனர். ஆனால் புகார் மீது எவ்வித நடவடிக்கையும் இல்லை. இதுபற்றி, போராட்டக்குழு ஒருங்கி ணைப்பாளர் குப்புசாமி கூறியதாவது, பொது சுத்திகரிப்பு நிலையம் அமைப்பது என்பது வரவேற்கத்தக்கது. ஆனால் நீர் நிலைகளில் இருந்து 5கிமீக்கு அப்பால்தான் பொது சுத்திகரிப்பு நிலையம் அமைக்க வேண்டும் என விதிகள் உள்ளன. இதையும் மீறி அப்பகுதியில் சுத்திகரிப்பு நிலையம் அமைப்பது பவானி மற்றும் காவிரி ஆறுகளை மாசுபடுத்தும். சாயக் கழிவு நீரால்புற்று நோய் பாதிப்பால் இப்ப குதியில் பலர் இறந்துள்ளனர். இச்சூழலில், இதுபற்றி கருத்து கேட்பு கூட்டம் எதுவும் நடத்தவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

பெருநிறுவனங்களைப் போல போல சிறு, குறு வணிகர்களுக்கும் சலுகை 

அனைத்து தொழில் வணிக சங்கங்களின் கூட்டமைப்பு வலியுறுத்தல்

ஈரோடு, ஜூலை 19- பெரு நிறுவனங்களுக்கு வருமான வரியைக் குறைத்தது போல சிறுகுறு வணிக நிறுவனங்களுக்கும் சலுகை வழங்க வேண்டும் என வணிகர் சங்கங்களின் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது. ஈரோடு மாவட்ட அனைத்து தொழில் வணிக சங்கங்களின் கூட்டமைப்பு (பேட்டியா) செயற்குழு கூட்டம், ஈரோட்டில் தலைவர் ஜெகதீசன் தலைமையில் நடந்தது. பொதுச் செயலாளர் பாலகிருஷ்ணன், பொரு ளாளர் துரைசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். துணை தலைவர் ரவிசந்திரன் வரவேற்றார். இந்திய பட்டய கணக்காளர் நிறுவன, ஈரோடு கிளை முன்னாள் தலை வர் கிருஷ்ணசாமி, ‘மத்திய பட்ஜெட்’ குறித்து பேசினார். இதில் வணிக நிறுவனங்கள், 24 மணி நேரமும் செயல்படலாம் என்ற தமிழக அரசின்உத்தரவில், பத்து நபர்களுக்கு மேல் பணி புரியும் நிறுவனங்களுக்கு கொடுக் கப்பட்ட அனுமதியை,அனைத்து வகை நிறுவனங்களுக்கும் வழங்கி, சட்ட திருத்தம் செய்ய வேண்டும். டிஜிட்டல் பண பரி வர்த்தனை அனைத்தும், இந்திய தொழில் நுட்பத்துடன், உள்நாட்டு மென்பொருள் துணையுடன் அமைக்க வேண்டும். அனைத்து வகையான பணமில்லா டிஜிட் டல் பண பரிவர்த்தனைக்கும் சேவை கட்ட ணம் உட்பட எவ்வித கட்டணமும் வசூலிக்க கூடாது. மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப் பட்ட பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வரி உயர்வைத் திரும்ப பெற வேண்டும்.  ஒரே நாடு, ஒரே வரி என்ற கொள்கையில் ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்டுள்ளது. ஆனால், சில மாநிலங்களுக்கு வரிச்சலுகை அளிக்கப் பட்டு உள்ளதால், ஒரே பொருளுக்கு மாநிலங் களுக்கு மாநிலம் விலை வேறுபடுகிறது. இத னால், மற்ற மாநில சிறு, குறு நிறுவனங்க ளின் வியாபாரம் பாதிக்கப்படுகிறது. எனவே,  நாடு முழுவதும் ஜிஎஸ்டியை ஒரே விதமாக அமல்படுத்த வேண்டும் உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

;