மாவட்டங்கள்

img

உதகையில் ஆணகழகன் போட்டி

உதகை, டிச. 16 - உதகையில் ஆணழகன் போட்டி நடத்தப்பட்டு மிஸ்டர் நீலகிரி 2019  தேர்வு செய்யப்பட்டார். நீலகிரி மாவட்டம், உதகையில் வில்லியம்ஸ் உடற்ப யிற்சி மையம் மற்றும் நீலகிரி மாவட்ட அமைச்சூர் ஆண ழகன் சங்கம் ஆகியவை இணைந்து மாவட்ட அளவி லான ஆணழகன் போட்டியை நடத்தினர். மலைப் பகுதி மேம்பாட்டுத் திட்ட  அரங்கத்தில் சனியன்று நடைப்பெற்ற நிகழ்ச்சியை உதகை நகர்மன்ற முன் னாள் துணை தலைவர் எஸ்.கே.ஜி.சுரேஷ்,  வில்லி யம்ஸ் உடற்பயிற்சி மைய உரிமையாளர் எம்.மணிகண் டன், நீலகிரி மாவட்ட அமைச்சூர் ஆணழகன் சங்கத்தின்  பொதுச்செயலாளர் கே.சிவக்குமார் ஆகியோர் துவக்கி வைத்தனர்.  80 பேர் கலந்துக்கொண்ட போட்டியில் மிஸ்டர் நீலகிரி 2019 ஆணழகன் பட்டத்தை மோனிஸ் பெற்றார். இரண்டாம் இடத்தை மனோஜ், மூன் றாம் இடத்தை ராஜேஷ் ஆகியோர் பெற்றனர். வெற்றி பெற்றவர்களுக்கு ரேஸ்கோர்ஸ் பாலாஜி பரிசுகளை வழங்கினார்.

;