மாவட்டங்கள்

img

மாற்றுத்திறனுடைய குழந்தைகள் பிறக்க குழந்தைத் திருமணங்களே காரணம்

தருமபுரி. ஜூலை 19- மாற்றுத்திறனுடைய குழந்தைகள் பிறக்க குழந்தைத் திருமணங்களே முக்கிய காரணம் என மாவட்ட ஆட் சியர் எஸ்.மலர்விழி தெரிவித்துள்ளர். தருமபுரி மாவட்ட ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித் திட்டத்தின் சார் பில் 18 வயதுக்குட்பட்ட மாற்றுத் திறன் குழந்தைகளுக்கான மருத்துவ முகாம் தருமபுரி நகராட்சி பெண் கள் உயர்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. இம்முகாமை மாவட்ட ஆட்சியர் எஸ்.மலர்விழி தொடங்கிவைத்து பேசியதாவது, தருமபுரி மாவட்டத்தில் மொத்தம் 33,788 மாற்றுத்திறனாளி குழந்தை களுக்கும், பெரியவர்களுக்கும் அடை யாள அட்டை வழங்கப்பட்டுள்ளது.  மாற்றுத்திறனுடன் குழந்தைகள் பிறக்க என்ன காரணங்கள் என்பதை தாய்மார்கள் உணரவேண்டும்.  பெண் களுக்கு 18 வயதுக்கு மேல் திருமணம் செய்ய வேண்டும்.  18 வயதுக்கு குறை வான பெண்களுக்கு திருமணம் செய் தால் அது குழந்தைத் திருமணம். குழந்தை திருமணம் செய்துவைப் பவர்கள் மீது சட்ட ரீதியாக நட வடிக்கை மேற்கொள்ளப்படும்.   பெண்குழந்தைகளை பாது காக்க அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.  இருந்த போதிலும் தருமபுரி மாவட்டத்தில் சென்ற ஆண்டு மட்டும் சுமார் 150க்கும் மேற்பட்ட குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.  கிராமப் புறங்களில் அதிக அளவில் குழந்தை திருமணங்கள் நடைபெற்று வரு கிறது.  உரிய வயது அடையாமல் பெண் பிள்ளைகளுக்கு திருமணம் செய்துவைக்கின்ற போது உடல் ரீதியும், மன ரீதியாகவும் ஒரு குழந் தையை பெற்று வளர்க்கக் கூடிய மன நிலையில் அந்த பெண் பிள்ளைகள் இருக்காது.  

இரும்பு சத்து குறைபாடு கார ணமாக பிரசவ காலங்களில் அதிக தாய்மார்கள் உயிரிழக்கின்றனர். இதை தடுப்பதற்காக அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் கருவுற்ற உடனே பதிவு செய்தால் முத்து லட் சுமி ரெட்டி மகப்பேறு நிதி உதவி திட் டத்தின் கீழ்  ரூ.18 ஆயிரம் வழங்கப்ப டுகிறது.  இந்த நிதி உதவியை பயன் படுத்தி கருவுற்ற தாய்மார்கள் இரும்பு சத்து அதிகம் உள்ள உணவுகளை உட்கொள்ள வேண்டும். அப்போது தான் ரத்தத்தில் ஹீமோகுளோபின் அதிகமாகவும், பிரசவ காலத்தில் குழந்தைகளை பெற்றெடுக்கும் வலிமை உருவாகும்.  தருமபுரி மாவட்டத்தில் தாய்மார் களுக்கு ரத்தத்தில் இரும்பு சத்தின் அளவு 7 கிராம் முதல் 8 கிராம் வரை உள்ளது.  ஆனால் சேலம் மற்றும் நாமக்கல் மாவட்டங்களில்  ரத்தத்தில் இரும்பு சத்தின் அளவு சாதாரணமாக 8 கிராமிற்கு மேல் உள்ளது.  தருமபுரி மாவட்டத்தில் உள்ள தாய்மார்கள் சரியா அளவு ஊட்டசத்து உணவுக ளையும், இரும்பு சத்து உள்ள உணவு களையும் உண்பதில்லை.  இதன் கார ணமாக அவர்களுக்கு  மாற்றுத்திறன் குழந்தைகள் பிறக்க வாய்புகள் அதிகம் உள்ளது. இதை தடுப்பதற்காக அங் கன்வாடி மையங்களில் கருவுற்ற தாய்மார்களுக்கு இணை உணவு மற்றும் சத்து மாவு இலவசமாக வழங் கப்பட்டு வருகிறது.  நெருங்கிய உறவுக்குள் திருமணம் செய்துகொள்வதும் மாற்றுத்திறன் குழந்தைகள் பிறப்பதற்கு முக்கிய காரணமாக கருதப்படுகிறது.  குழந்தை கள் பிறந்த பிறகு உரிய காலத்தில் மாற்றுத்திறன் உள்ளதை கண்டறிய வேண்டும்.

காது கேட்காத குழந்தை யாக இருந்தால்  3 வயதுக்குள் அந்த குறைபாட்டை கண்டறிந்தால் அவர்க ளுக்கு முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டு திட்டத்தின் மூலம் இலவசமாக காக்லார் மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப் படுகிறது.  தனியார் மருத்துவமனை களிலும்  முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டு திட்டத்தின் மூலம்  ரூ.5 லட்சம் முதல் ரூ.8 லட்சம் வரை செலவு செய்து இந்த அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்படுகிறது.  இந்த அறுவை சிகிச்சைக்குப்பின் குழந்தைகளுக்கு கேட்கும் திறன் அதிகரிக்கும். உரிய வயதில் குழந்தைகளுக்கு உள்ள குறைபாடுகளை கண்டறிந் தால் அவர்களுக்கான சிகிச்சை மற்றும் பயிற்சிகள் மூலம் அவர்களை சாதாரண நிலைக்கு கொண்டுவர முடியும் என ஆட்சியர் தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில், முதன்மைக் கல்வி அலுவலர் தமு.இராமசாமி, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் பாபு, மாவட்ட கல்வி அலு வலர் சுப்பரமணி, ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி உதவித்திட்ட அலு வலர்கள் வெங்கடேசன், தங்கவேலு, மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சுகந்தி, மேற்பார்வையாளர் வசுமதி மற்றும் அரசு மருத்துவர்கள், சிறப்பு ஆசிரியர்கள் பலர் கலந்து கொண் டனர்.

;