திங்கள், செப்டம்பர் 28, 2020

மாவட்டங்கள்

8 மாதம் சம்பளம் இல்லாமல் தவிப்பு

 நாகர்கோவில், ஆக.11- இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் உள்ள ஆலயத்தில் தூய்மைப்பணி செய்யும் ஏழைப்பெண்ணுக்கு கடந்த 8 மாதங்களாக சம்பளம் தராமல் திரு நந்திக்கரை நந்தீஸ்வரர் ஆலய நிர்வா கம் பழிவாங்கி வருகிறது. கன்னியாகுமரி மாவட்டம் திருநந்திக் கரையில் உள்ளது நந்தீஸ்வரர் கோயில். இங்கு கடந்த 10 ஆண்டுகளாக தூய் மைப்பணியாளராக (தளி பணியாளர்) எஸ்.கலாகுமாரி வேல பார்த்து வந்தார். இவரது மாதச்சம்பளம் ரூ.2008 மட்டும். ஆலய நிர்வாகி (ஸ்ரீகாரியம்) செந்தில் குமார் கடந்த ஜனவரி மாதம் இவரிடம், வேறு கோவிலுக்கு செல்வதாக இருந் தால் மட்டுமே வேலை எனக்கூறி சம்ப ளம் தர மறுத்துள்ளார். காரணமின்றி பழி வாங்கலை சிஐடியு தலைமையிலான குமரி மாவட்ட ஆலய ஊழியர் சங்கம் அறநிலையத்துறை இணை ஆணைய ரின் கவனத்துக்கு கொண்டு சென்றுள் ளது. அதைத் தொடர்ந்து இணை ஆணை யர் தலையிட்டு விசாரணையும் நடத்தி யுள்ளார்.  ஆனாலும், கோயில் நிர்வாகம் கடந்த 8 மாதங்களாக சம்பளம் தராமலும் வேலைக்கு அனுமதிக்காமலும் பழி வாங்கி வருகிறது. இது குறித்து சங்கத் தின் சார்பில் தமிழக முதல்வருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கொரோனா நோய் தொற்று ஊரடங்கு காலத்தில் திருநந்திக்கரை நந்தீஸ்வரர் ஆலய நிர்வாகம் பெண் ஊழியரை பட்டினி போடுவதாக தெரிவித்து முதல்வரின் தலையீடு கோரியுள்ளது.

;