சனி, செப்டம்பர் 19, 2020

மாவட்டங்கள்

img

சாக்கடை கால்வாயான அருமனை -மழுவன்சேரி சாலையை சீரமைக்கக் கோரி சிபிஎம் ஆர்ப்பாட்டம்

அருமனை, ஆக.11- கன்னியாகுமரி மாவட்டத்தில் அருமனை-மழுவன்சேரி- குறூர் கிராமச் சாலை உள்ளது. அருமனை மையப்பகுதியிலி ருந்து சாலையின் இருபுறம் உள்ள வடிகால் (மழைநீா் ஓடை) இச் சாலைவழியாக வந்து தனியார் நிலத்தில் பாய்ந்து அருகில் உள்ள வாய்க்காலில் சென்று கொண்டிருந்தது. நாளடைவில் மழை நீர் ஓடை சாக்கடை கழிவு நீர் ஓடையாக மாறி துர்நாற்றம் வீசத்தொடங்கியது. அப்போது  தனியார் அவர்கள் சொத்தில் சாக் கடை வராமல் அடைத்துள்ளனர்.  இதனால் சுமார் ஆறுமாதங்க ளுக்கு முன்னால் மழுவன்சேரி சாலையில் சாக்கடை பெருக்கெ டுத்து ஓடத் தொடங்கியது. பொது மக்கள் நடந்து செல்லமுடியாத சூழ்நிலையும் நோய்கள் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. தற் போது வடிகால் ஓடை அருகில் மழை வெள்ளத்தால் சாலைதுண் டிக்கப்பட்டு போக்கு வரத்து தடைப்பட்டுள்ளது.  மேலும், அருமனை பேரூ ராட்சிக்கு சொந்தமான குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் இங்கு உள்ளது. சுத்திகரிக்கப் பட்ட குடிநீர் குழாய் அமைத்து இந்த சாக்கடை கால்வாய் வழியாக கொண்டு செல்லப்படுகிறது. இச் சாலையை உடனடி சீா் செய்யக் கேட்டும் வடிகாலுக்கான மாற்று பாதை காலம் கடத்தாமல் அமைக்கக் கேட்டும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மழுவன்சேரி கிளைசார்பில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. வட்டாரக்குழு உறுப்பினர் நெல்சன் தலைமை தாங்கினார். மூர்த்தி, சுரேஷ் குமார், சரவணன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

;