திங்கள், செப்டம்பர் 28, 2020

மாவட்டங்கள்

img

மின்வாரிய நிர்வாகத்தின் தொழிலாளர் விரோதபோக்கைக் கண்டித்து மின்ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

உதகை, செப். 16 - தமிழக அரசின் மின்வாரிய நிர் வாகத்தின் தொழிலாளர் விரோத போக்கைக் கண்டித்து மின்வாரிய அனைத்து தொழிற்சங்க கூட்ட மைப்பினர் புதனன்று ஆர்ப்பாட் டத்தில் ஈடுபட்டனர்.

மின்வாரியத்தில் பணிபுரிந்து வரும் ஊழியர்களுக்கு பதவி உயர்வு, பணியிட மாறுதல் உத்தர வுகளை காலதாமதம் செய்யக் கூடாது. ஆரம்ப நிலைப் பதவி களை உடனே நிரப்ப வேண்டும். மின்வாரியத் தலைவரின் தன் னிச்சையான போக்கை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியு றுத்தி தமிழ்நாடு மின்வாரிய தொழிற்சங்க கூட்டமைப்பினர் மாநிலம் முழுவதும் ஆர்ப்பாட் டத்தில் ஈடுபட்டனர்.

நீலகிரி மாவட்டம் குந்தா, மசினகுடி உள்ளிட்ட பல பகுதிக ளில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத் தில் தமிழ்நாடு மின் தொழிலாளர் சம்மேளன செயலாளர் ஆர்.கிருஷ் ணன், தமிழ்நாடு மின் வாரிய பொறியாளர் கழக செயலாளர் எஸ்.பாலாஜி, தொழிலாளர் முன் னேற்ற சங்கத்தின் செயலாளர் நஜி புதீன், மின்வாரிய ஐக்கிய தொழி லாளர் சங்கத்தின் மாநிலத் துணைச்செயலாளர் ஜெயக் குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

ஈரோடு

ஈரோடு மாவட்டம், கோபி செட்டிபாளையம் தமிழ்நாடு மின் சாரவாரிய மேற்பார்வை பொறி யாளர் அலுவலகம் முன்பு நடை பெற்ற ஆர்ப்பாட்டத்தில் அனைத்து தொழிற்சங்க கூட்ட மைப்பின் நிர்வாகிகள் உட்பட 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கண்டன முழக்கங்களை எழுப்பினர்.

கோவை

கோவை மாவட்டம், தலைமை பொறியாளர் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மின் ஊழியர்கள் அலுவலர்கள், பொறியாளர்கள் என பலர் கலந்து கொண்டு கோரிக்கை முழக்கங் களை எழுப்பினர்.

;