திங்கள், செப்டம்பர் 28, 2020

மாவட்டங்கள்

உடுமலை : கனமழையால் பஞ்சலிங்க அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு

உடுமலை, ஆக. 7- மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்து வரும் பலத்த மழையால் உடுமலை பஞ்சலிங்க அருவிக்கு நீர்வ ரத்து அதிகரித்துள்ளது. திருப்பூர் மாவட்டம், உடுமலை அருகே மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதியில் அமைந்துள்ள திருமூர்த்திமலையில் , பஞ்சலிங்க அருவி அமைந்துள் ளது.

இது, திருப்பூர் மாவட்டத்தின் பிரசித்தி பெற்ற சுற்றுலா தலங்களில் ஒன்றாக விளங்குகிறது. இந் நிலையில் கடந்த சில தினங்களாக மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பலத்த மழை பெய்து வருவதால் நீர்பிடிப்பு பகுதிகளான வண்டியாறு, பாரப்பட்டி ஆறு, கிழவன்ஆறு, கொட்டை ஆறு,  குருமலை ஆறு, தோணி ஆறு ஆகியவற்றில் அதிக நீர்வரத்து ஏற்பட் டுள்ளது.

இதனால் பஞ்சலிங்க அருவியில் தண்ணீர் ஆர்பரித்து கொட்டி வருகிறது. இந்நிலையில், அருகில் உள்ள கரையோர மக்களுக்கு வெள்ள அபயா எச்சரிக்கை அறிவிக்கப்பட்டுள்ளது.

;