வெள்ளி, ஆகஸ்ட் 14, 2020

மாவட்டங்கள்

img

வடிகால் வசதி செய்து தரக்கோரி பொதுமக்கள் சாலை மறியல்

ஈரோடு, பிப். 18- வடிகால் வசதி செய்து தரக்கோரி சத்திய மங்கலத்தில் பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதி யில் பரபரப்பு ஏற்பட்டது. சத்தியமங்கலம் நகராட்சிக்குட்பட்ட கொங்குநகர் பகுதியில் 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. கடந்த சில நாட்களுக்கு முன்பு கொங்குநகரில் உள்ள குறுக்கு சாலைகளில் நகராட்சி சார் பில் தார்ச்சாலை அமைக்கும் பணி நடை பெற்றது. அந்த பணியின் போது சாலை யோரம் இருந்த வடிகால் உடைப்பு ஏற்பட்டு சேதமடைந்தது. இதன்காரணமாக கழிவு நீர் வடிகாலில் செல்ல முடியாமல் தேங்கி நின்றதால் துர்நாற்றம் வீசியதோடு, கொசுக் கள் உற்பத்தியாகும் கூடாரமாக மாறி வரு கிறது. இதனால், சேதமடைந்த வடிகாலை அகற்றிவிட்டு புதியதாக வடிகால் வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் நகராட்சி நிர்வாகத்திடம் முறையிட்டனர். ஆனால், எந்தவித நடவ டிக்கையும் நகராட்சி நிர்வாகம் எடுக்க வில்லை. இதனால், ஆவேசமடைந்த பொதுமக் கள் 50க்கும் மேற்பட்டோர் திங்களன்று சத்தி யமங்கலம் – அத்தாணி சாலையில் வடக்குப் பேட்டை பகுதியில் உள்ள சந்தைப்பேட்டை பேருந்து நிறுத்தத்தில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவலறிந்த சத்தியமங்கலம் நகராட்சி அதிகாரிகள் மற்றும் காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று மறியல் போராட் டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். இதனையடுத்து விரைவில் வடிகால் வசதி செய்து தரப்படும் என அதிகாரிகள் உறுதியளித்ததை தொடர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடு பட்ட பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

;