சனி, செப்டம்பர் 19, 2020

மாவட்டங்கள்

பயிர்க் கடன் தவணைக்கு வட்டி ச் சலுகை இல்லை என்பதா?

விவசாயிகள் சங்கம் கண்டனம்

சென்னை, ஆக. 28- உரிய காலத்தில் கடன் தவணை கட்டவில்லை என்றால் வட்டிச் சலுகை கிடையாது என்ப தற்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் கடும் கண்டனம் தெரிவித் துள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு விவ சாய சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் பெ.சண்முகம் விடுத்  திருக்கும் அறிக்கை வருமாறு: விவசாயிகள் கூட்டுறவு வங்கி களில் பயிர்க்கடன் பெற்று விவ சாய பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். கொரோனா நோய்த் தொற்று காரணமாக தவணை தொகை வசூல் செய்ய ரிசர்வ் வங்கி அறிவுறுத்தலின் பேரில் 31.8.2020 வரை கால அவகாசம் வழங்கி மாநில கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் உத்தரவிட்டிருந்தார். விவசாயிகள் பெறும் பயிர்க்  கடன்களை உரிய காலத்தில் திருப்பிச் செலுத்தும் விவசாயி களுக்கு மத்திய அரசு 3 சதவீத மும், மாநில அரசு 4 சதவீதமும் வட்டி மானியமாக வழங்கி வரு கிறது. உரிய காலத்தில் கடனை  திருப்பிச் செலுத்த ஊக்கப்ப டுத்தும் விதமாக இந்தச் சலுகை மத்திய- மாநில அரசுகளால் வழங்கப்பட்டது.

தற்போது 31.8.2020க்குள் தவணை தொகையை திரும்ப செலுத்துபவர்களுக்கு மட்டுமே வட்டிச் சலுகை வழங்கப்படும் என்றும், எனவே பயிர்க்கடன் தவணை தொகையை ஆகஸ்ட்  31க்குள் வசூலிக்க வேண்டு மென்றும் தமிழ்நாடு மாநில தலைமை கூட்டுறவு வங்கி தொடக்க வேளாண்மை கூட்டு றவு சங்கங்களை வற்புறுத்தி யுள்ளது. கூட்டுறவு நிர்வாகமே இப்படி முன்னுக்குப்பின் முர ணாக நடந்து கொள்வது வன்மை யான கண்டனத்திற்குரியது. நோய்த்தொற்று நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டுள் ளது. ஊரடங்கு முற்றாக நீக்கப்பட வில்லை. நாடு முழுவதும் இயல்பு  நிலை திரும்பாத நிலையில் விவ சாயிகள் பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் விவசாயப் பணிகளை மேற்கொண்டுள்ளனர். இந்த  நிலையில், கடன் தவணையை  உடனே செலுத்த வேண்டுமென்ப தும் இல்லையென்றால் வட்டிச் சலுகை கிடையாது என்று அறி விப்பதும் குரூரமான நடவடிக்கை  என்பதை தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சுட்டிக்காட்டுகிறது. எனவே, இந்தப் பிரச்சனை யில் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் நேரடியாக தலையிட்டு கடன் தவணை செலுத்துவதற் கான காலத்தை நீட்டிப்பதுடன், விவசாயிகளுக்கு மத்திய-மாநில அரசுகளின் வட்டிச்சலுகை  கிடைப்பதற்கான நடவடிக்கை யையும் மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

;