மாவட்டங்கள்

img

ஆறுமாத காலம் ரேசன் பொருட்களை இலவசமாக வழங்கிடுக

ஆட்சியர் அலுவலகத்தில் வாலிபர் சங்கம் முறையீடு

கோவை, ஜூலை 24 -  ஆறு மாதங்களுக்கு ரேசன் பொருட் களை விலையில்லாமல் வழங்கிடக்கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாலிபர் சங்கத்தினர் வெள்ளியன்று மனு அளிக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர். கொரோனா நோய்த்தொற்று காரணமாக சரி பாதிக்கும் மேற்பட்ட மக்கள் வாழ்வாதா ரம் பாதிக்கப்பட்டு வேலையின்றி, வருவா யின்றி அவதிப்பட்டு வருகின்றனர். இந்நிலை யில்  நவம்பர் மாதம் வரை அரிசியை மட்டும் இலவசமாக வழங்குவோம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு ஏழை, எளிய மக்களின்  பசியை போக்கிட உதவாது.  ஏற்கனவே தமிழகத்தில் அரிசி இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. ஜூலை மாதம் வரை அரிசியுடன் சர்க்கரை, பருப்பு, பாமாயில் ஆகிய பொருட்கள் இல வசமாக வழங்கப்பட்டுள்ளது. இந்நிலை யில், கொரோனா வைரஸ் பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதுடன் மக்களின் வாழ்வாதாரமும் பெருமளவில் பாதிக்கப்பட் டுள்ளது.  எனவே, தற்சமயம் வழங்கி வருகிற அனைத்து அத்தியாவசிய ரேசன் பொருட் களையும் ஆறு மாதங்களுக்கு விலை யில்லாமல் வழங்கிடவும், ரேசனில் வழங்கப் படுகிற பொருட்களின் அளவு குறையா மல்,  தரமாக வழங்குவதையும் உறுதி செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல் வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வாலி பர் சங்கத்தினர் மாவட்ட ஆட்சியர் அலுவல கத்தில் மனு அளிக்கும் போராட்டத்தில் ஈடு பட்டனர். இதன் ஒரு பகுதியாக, கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மனு அளிக்கும் போராட்டத்தில் வாலிபர் சங்கத் தின் மாவட்ட தலைவர் ஸ்டாலின் குமார், மாவட்ட செயலாளர் கே.எஸ்.கனகராஜ் உள் ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்ட னர்.

சேலம்

சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத் தில் நடைபெற்ற மனு அளிப்பு போராட் டத்தில் மாவட்டத் தலைவர் பி.கந்தசாமி, மாவட்டச் செயலாளர் பி.கணேசன் உள்ளிட்ட திரளானோர் கலந்து கொண்டு மனு அளித்த னர்.

நீலகிரி

நீலகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத் தில் நடைபெற்ற மனு அளிக்கும் போராட்டத் தில் சங்கத்தின் மாவட்டப் பொருளாளர் சி.வினோத் உட்பட பலர் கலந்து கொண்டு மனு அளித்தனர்.

;