சனி, செப்டம்பர் 19, 2020

மாவட்டங்கள்

img

ஊதிய உயர்வு, நிலுவை தொகை கேட்டு துப்புரவு தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

கும்பகோணம் ஆக.28- தஞ்சை மாவட்டம் பாபநாசம வட்டார  வளர்ச்சி அலுவலகம் முன்பு ஊரக உள்ளாட்சி  துறை  தொழிலாளர் சங்க(சிஐடியு) சார்பில்  ஊதிய உயர்வு நிலுவை தொகை வழங்கிட  வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை களை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஊரக உள்ளாட்சி துறை தொழிலாளர் சங்க  மாவட்டச் செயலாளர் பி.ஜேசுதாஸ் தலைமை  வகித்தார். மாவட்ட துணைத் செயலாளர் ராஜீ,  சிஐடியு மாவட்ட செயலாளர் ஜெயபால், பொருளாளர் கண்ணன், சிபிஎம் பாபநாசம் ஒன்றிய செயலாளர் காதர் உசேன், நகர செய லாளர் முரளிதரன் உள்ளிட்டோர் கலந்து கொ ண்டனர். தொழிலாளர்கள் பணி ஓய்வு பெறு ம்போது பணப் பயன்களை உடனே வழங்கி  எழுத்துப்பூர்வமான பணி ஓய்வு உத்தரவை  வழங்க வேண்டும். அனைத்து தொழிலாளர்க ளுக்கும் பணிப்பதிவேடு மற்றும் காப்பீடு திட்ட த்தை அமல்படுத்த வேண்டும். மேல்நிலை  நீர்த்தொட்டி ஆப்ரேட்டர், துப்புரவு தொழி லாளர்கள் மற்றும் தூய்மை காவலர்கள் அனைவரும் அரசு ஊழியர்கள் என்பதை உறுதி செய்திட வேண்டும். தூய்மை காவ லர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

;