சனி, செப்டம்பர் 19, 2020

மாவட்டங்கள்

img

தஞ்சை மாவட்டத்தில் அனைத்து பெண்கள் கூட்டமைப்பு ஆர்ப்பாட்டம்

தஞ்சாவூர், ஆக.28- ஏழை-எளிய மக்களுக்கு பய ன்படக்கூடிய அளவில் சமூக சமை யல் அறைகளை அமைத்திட வே ண்டும். பேரிடரால் வாழ்வாதா ரத்தை இழந்து தவிக்கும் குடு ம்பங்களுக்கு ரூ.10,000 மாதம் தோறும் வழங்க வேண்டும். நாட்டு மக்களின் வாழ்வாதாரம், வேலை, கல்வி, மருத்துவம், நுண்நிதி நிறு வன நெருக்கடிக்கு தடை உள்ளிட்ட அடிப்படை உரிமைகள் கேட்டும், சுகாதார ஊழியர்கள் அங்கன்வாடி ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்.  அரசு நலத்திட்டங்களுக்கு ஆதார் அட்டையை கட்டாயமாக்க கூடாது. பெண் குழந்தைகளின் கல்வியை உறுதி செய்ய வே ண்டும். கர்ப்ப கால உதவித் தொ கையை நிபந்தனைகள் ஏதுமின்றி  ஒரே தவணையில் ரூ.6,000 வழ ங்க வேண்டும். ஏழை, எளிய மாண வர்களின் கல்வியை ஊக்கப்படுத்த ஸ்மார்ட் போன், மடிக்கணினி, தொ லைக்காட்சிப் பெட்டிகளை பிஎம்கேர் நிதியிலிருந்து வழங்கிட வேண்டும். அரசு மருத்துவமனை களில் தனியாரை அனுமதிக்கக் கூடாது.

சுய உதவிக் குழுக்களில் பெ ற்றுள்ள கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும். சிஏஏ., என்.ஆர்.சி., என்.பி.ஆர்., போராட்டங்களை முன்னெடுத்தவர்களை அடக்கு முறைகள் கொண்டு துன்புறுத்தக் கூடாது. நிர்பயா நிதியை திசை திருப்பக் கூடாது. தில்லி கலவரம் குறித்து நீதி விசாரணை செய்ய  வேண்டும். சமூக நலத் திட்டங்க ளுக்கு உடனடியாக நிதி ஒதுக்க வேண்டும். கொரோனா பேரிடரால் வேலை வாய்ப்பை இழந்து நிற்கும் ஏழை- எளிய மக்களுக்கு வேலைவாய்ப்பை உறுதி செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியு றுத்தி அனைத்து பெண்கள் கூட்ட மைப்பு சார்பில் தேசம் தழுவிய போ ராட்டத்தின் ஒரு பகுதியாக தஞ்சை மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

தஞ்சை மாவட்டத்தில் பல இட ங்களில் வீடுகள் தோறும் நடைபெ றும் போராட்டம், அம்மாப்பேட்டை ஒன்றியம் இராராமுத்திரைக் கோ ட்டையில் 5 இடங்களிலும், ஒன்ப த்துவேலியில் மார்க்கரெட் தலை மையில் 2 இடங்களிலும் நடைபெ ற்றது. மாதர் சங்க மாவட்டத் தலை வர் ஆர்.கலைச்செல்வி, ஒன்றியச் செயலாளர் சசிமதி, ஒன்றியக்குழு உறுப்பினர் கிருஷ்ணகுமார், ஜி.வசந்தி கலந்து கொண்டனர்.  தஞ்சை மாநகரத்தில் மாவட்டப் பொருளாளர் வசந்தி, தலைமை யில் 7 இடங்களில் நடைபெற்றது.  மதுக்கூர் ஒன்றியம் மூத்தாக்குறி ச்சியில் கலாவதி தலைமையிலும், ராமாம்பாள்புரத்தில் ஜெயந்தி தலை மையிலும், ஒரத்தநாடு ஒன்றியம் பஞ்சநதிக்கோட்டையில் கே. மலர்கொடி தலைமையிலும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  உசிலம்பட்டி அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் மாவட்டச் செயலா ளர் எஸ்.தமிழ்ச்செல்வி பூதலூர் ஒன்றியம் உசிலம்பட்டியில் கலந்து  கொண்டார். பாபநாசம் பி.விஜயாள், பூதலூர் என்.வசந்தா, வ.அஞ்சலி தேவி, செங்கிப்பட்டி எஸ்.மலர்கொடி, உழைக்கும் பெண்கள் ஒருங்கி ணைப்புக்குழு கல்யாணி ஆகி யோர் போராட்டங்களை ஒருங்கி ணைத்து நடத்தினர். 

கும்பகோணம்

கும்பகோணம் ஒன்றியம் பாபு ராஜபுரத்தில் ஒன்றிய தலைவர் கலா  தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பா ட்டத்தில் விவசாய தொழிலாளர் சங்க மாநிலக்குழு உறுப்பினர் நாக ராஜன் உள்ளிட்ட மாதர் சங்கத்தி னர் கலந்து கொண்டனர். திருவிடை மருதூரில் மாவட்ட குழு உறுப்பினர் அறிவுராணி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
 

;