திங்கள், செப்டம்பர் 28, 2020

மாவட்டங்கள்

அவிநாசியில் பலத்த சூறைக்காற்று - வாழை மரங்கள் முறிந்து சேதம்

அவிநாசி, ஆக. 7- அவிநாசி சுற்று வட்டா ரப் பகுதியில் புதனன்று வீசிய பலத்த சூறைக்காற்றி னால் சுமார் 10 ஆயிரத்துக் கும் மேற்பட்ட வாழை மரங் கள் சேதமடைந்தன. திருப்பூர் மாவட்டம், அவிநாசி சுற்றுவட்டாரப் பகுதிகளில் புதனன்று வீசிய பலத்த சூறைக்காற்றால் அப்பகுதிகளில் சுமார் 50 ஏக்கருக்கும் மேற்பட்ட விளைநிலங்களில் பயிரி டப்பட்டு இருந்த 10 ஆயி ரத்துக்கும் மேற்பட்ட வாழை மரங்கள் முறிந்து சாய்ந்தன.

இதனால் வாழை விவசாயிகள் பெரும் நஷ் டத்தை சந்தித்துள்ளனர்.  இதையடுத்து வருவாய்த் துறையினர் மற்றும் தோட் டக்கலைத் துறையினர் பாதிக்கப்பட்ட இடத்தை பார்வையிட்டு கணக்கெ டுக்கும் பணியில் ஈடுபட்டுள் ளனர். மேலும், இதற்கான இழப்பீட்டுத் தொகையை உடனடியாக கணக்கிட்டு வழங்க வேண்டும் என வாழை விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.

;