திங்கள், செப்டம்பர் 21, 2020

மாவட்டங்கள்

img

பழுதான மின்மோட்டார் சரி செய்யப்படுமா? குடிநீரின்றி தவிக்கும் செட்டித்திருக்கோணம் கிராம மக்கள்

அரியலூர், ஆக.12- அரியலூர் மாவட்டம் பெரியதிருக்கோ ணம் ஊராட்சிக்குட்பட்டது செட்டித்திருக்கோ ணம் கிராமம். இக்கிராமத்தில் 500-க்கும்  மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்நிலையில் செட்டித்திருக்கோணம் காமராஜபுரம் பகுதியில் உபரிநிதி திட்ட த்தின் கீழ் 2014- 2015 ஆம் ஆண்டு ரூ.2 லட்ச த்து 50 ஆயிரம் மதிப்பீட்டில் ஆழ்துளை கிணறு  மற்றும் மினி சின்டெக்ஸ் டேங்க் அமைத்து மக்களுக்கு குடிநீர் வழங்கப்பட்டு வந்தது. தற்போது அங்குள்ள ஆழ்துளை கிணற்றில் உள்ள மின்மோட்டார் பழுதடைந்து உள்ளது. இதனால் கடந்த ஒரு மாதமாக குடி தண்ணீர் வருவதில்லை. மேலும் சின்டெ க்ஸ் டேங்க் கீழே உள்ள சிமெண்ட் தளம் முற்றி லும் சேதமடைந்து உள்ளது. இதனால் அங்கு  தேங்கி நிற்கும் கழிவு நீரில் பாத்திரத்தை வைத்து தண்ணீரை பொதுமக்கள் பிடிக்கும் நிலை நீடிக்கிறது. இதுகுறித்து பல முறை ஊராட்சி நிர்வா கத்திடம் புகார் அளித்தும் எந்த வித நடவ டிக்கையும் எடுக்கப்படவில்லை. தற்போது மழை பெய்து வருவதால் ஏரி, குளங்களில் சேறும் சகதியுமான தண்ணீரை பிடித்து குடிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது என அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.  எனவே மாவட்ட நிர்வாகம் உடனடியாக  நடவடிக்கை எடுத்து பழுதான மின்மோட்டாரை சீரமைப்பதோடு, தண்ணீர் பிடிப்பதற்கான சிமெண்ட் தரைதளத்தை அமைத்து தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

;