வெள்ளி, அக்டோபர் 30, 2020

மாநிலங்கள்

img

கொரோனா மொத்த பாதிப்பில் கால்பங்கினர் மும்பையைச் சேர்ந்தவர்கள்... முதல்வர் உத்தவ் தாக்கரே தகவல் 

மும்பை:
மகாராஷ்டிரா மாநிலத்தில் கொரோனா பாதிப்பு குறித்து அம்மாநில முதல்வர் உத்தவ் தாக்கரே ஞாயிறன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது," மகாராஷ்டிராவில் கொரோனா வைரஸ் தாக்கத்தில் 80 சதவீத நோயாளிகள் அறிகுறியற்றவர்கள்" நாட்டில் அதிக எண்ணிக்கையிலான கொரோனா நோயாளிகள் மகாராஷ்டிரத்தில் கண்டறிப்பட்டுள்ளன. தற்போது 7,628 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.  

நாட்டில் 26,000 க்கும் மேற்பட்டோர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் கால் பகுதிக்கும் அதிகமானவர்கள் நாட்டின் நிதித் தலைநகரான மும்பையைச் சேர்ந்தவர்கள். ஊரடங்கை நீட்டிப்பது குறித்து அரசு முடிவு செய்யும். தனியார் மருத்துவர்கள் தங்களது மருத்துவமனைகளை திறக்க வேண்டும். டயாலிசிஸ் மையங்களை செயல்பாட்டிற்குக் கொண்டுவர வேண்டும். கொரோனாவை முற்றாக அழிப்பது நமது கடமை என்றார்.  மும்பையில் மட்டும் 3,029 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மும்பையில் கொரோனா சமூகத்தில் பரவிவிட்டதோ என்ற அச்சம் நிலவுகிறது.

;