திங்கள், செப்டம்பர் 21, 2020

மாநிலங்கள்

img

பாஜகவுக்கு குடைச்சலை ஆரம்பித்தது சிவசேனா

மும்பை:

பாஜக-வின் கூட்டணி கட்சியான சிவசேனாவின் ‘சாம்னா’ பத்திரிகை, திடீரென காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியையும், பிரியங்கா காந்தியையும் வெகுவாக பாராட்டி, பாஜக-வுக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளது.


“கடந்த மக்களவைத் தேர்தலில் எதிர்க்கட்சியாக உட்காரும் அளவுக்குக்கூட காங்கிரஸ் வெற்றி பெறவில்லை. ஆனால்,இந்த முறை நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் எதிர்க்கட்சியாக உட்காரும். அதன் தலைவர் ராகுல் எதிர்க்கட்சி தலைவராவார். இது நிச்சயமாக ராகுலுக்கு கிடைத்த வெற்றிதான். ராகுலும், பிரியங்காவும் கடின உழைப்பாளிகள்” என்று ‘சாம்னா’ தலையங்கம் தீட்டியுள்ளது.


இதன்மூலம், தேர்தல் முடிவுகள் வெளிவருவதற்கு முன்பே, பாஜக-வுக்கு சிவசேனா குடைச்சலைக் கொடுக்க ஆரம்பித்துள்ளது.மக்களவைத் தேர்தலில் மீண்டும் பாஜகவெற்றிபெறும் என்று கணிப்புகள் வெளியாகி இருக்கும் நிலையில், தங்களுக்கு 2 அமைச்சர் பதவிகளை கட்டாயம் வாங்கிவிட வேண்டும் என்று சிவசேனா தீர்மானமாகஉள்ளது. அதற்கான மிரட்டல் ஆயுதமாகவே ராகுல், பிரியங்காவை பாராட்டி, காங்கிரசுக்கு ஆதரவளிக்கவும் தயங்கமாட்டோம் என்று மறைமுகமாக பாஜகவைஎச்சரிக்கை செய்துள்ளது.

;