திங்கள், அக்டோபர் 26, 2020

மாநிலங்கள்

img

மகாராஷ்டிராவில் பரவும் காங்கோ காய்ச்சல் - பொதுமக்களுக்கு எச்சரிக்கை  

மகாராஷ்டிரா மாநிலத்தில் காங்கோ காய்ச்சல் என கூறப்படும்  கிரிமியன் காங்கோ ரத்தக்கசிவு காய்ச்சல் (சி.சி.எச்.எஃப்) மனிதர்களில் உள்ள உண்ணி மூலம் பரவுகிறது. 
காங்கோ காய்ச்சல் பரவல் காரணமாக பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என பாலகர் மாவட்ட நிர்வாகம் செவ்வாயன்று அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

இந்த காய்ச்சலானது கிரிமியன் காங்கோ ரத்தக்கசிவு காய்ச்சல் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இது மனிதர்களில் உள்ள ஒட்டுண்ணிகள் மூலம் பரவுகிறது. ஏற்கனவே, கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், மீண்டும் ஒரு நோய் தொற்று பரவி வருவது கவலை அளிப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தற்போது இந்த நோயானது மாநிலத்தின் எல்லைகளில் அமைந்துள்ள மாவட்டங்களில் பரவ வாய்ப்புள்ளது. நோயை கட்டுப்படுத்துவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருவதாக கூறியுள்ளனர்.

காங்கோ நோய் ஒரு குறிப்பிட்ட வகை செல் மூலம் ஒரு விலங்கிலிருந்து பாதிப்பு தொடங்குகிறது.  பாதிக்கப்பட்ட விலங்குகளில் இறைச்சியை சாப்பிடுவதன் மூலம் நோய் மனிதர்களுக்கு பரவுகிறது என அறிக்கை தெரிவித்துள்ளது. இந்த நோய் சரியான நேரத்தில் கண்டறியப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டால், 30 சதவிகித நோயாளிகள் இறக்கிறார்கள். சி.சி.எச்.எஃப் என்பது புன்யவிரிடே வகையை சார்ந்த டிக் பரவும் வைரஸ் பரவலால் இந்த நோய் ஏற்படுகிறது. இது கடுமையான ரத்தக்கசிவு காய்ச்சலை ஏற்படுத்துகிறது. இறப்பு விகிதம் 10 முதல் 40 சதவிகிதம் வரை உள்ளதாக என உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளது. காங்கோ நோயிக்கான தடுப்பூசி கிடைக்கவில்லை.
இரத்தம் சுரப்பு, உறுப்புகள் அல்லது பிற உடல் திரவங்களுடன் நெருங்கிய தொடர்பு இருப்பதால் மனிதர்களுக்கு பரவல் ஏற்படலாம். மருத்துவ உபகரணங்களின் முறையற்ற கருத்தடை, ஊசிகளை மறுபயன்பாடு செய்தல் மற்றும் மருத்துவப் பொருட்களை மாசுபடுத்துதல் போன்ற காரணங்களால்  தொற்றுநோய்களும் ஏற்படக்கூடும் என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
 

;