ஞாயிறு, அக்டோபர் 25, 2020

மாநிலங்கள்

img

ஐபிஎல் போட்டிகளில் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக 6 பேர் கைது

ஐபிஎல் போட்டிகளில் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக பெங்களூரு குற்றப்பிரிவு அதிகாரிகளால் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பாக பனஸ்வாடி மற்றும் மல்லேஸ்வரத்தில் இரண்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

பெங்களூரில் இந்தியன் பிரீமியர் லீக்கில் கிரிக்கெட் போட்டிகள் நடந்து வருகிறது. இதில், சூதாடிய 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் இருந்து 6 லட்சம் ரூபாயை மத்திய குற்றப்பிரிவு அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். இரண்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், மேலும் தொடர்புடையவர்களை தேடி வருகிறார்கள்.
ஐபிஎல் 2020 செப்டம்பர் 19 ஆம் தேதி தொடங்கி நவம்பர் 10 ஆம் தேதி வரை ஐக்கிய அரபு எமிரேட்ஸ் - அபுதாபி, ஷார்ஜா மற்றும் துபாய் ஆகிய மூன்று இடங்களில் நடந்து வருகிறது.

அதுமட்டுமில்லாமல், இணையம் வாயிலாக பலர் இந்த சூதாட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இணைய வாயிலாக சூதாட்டம் நடத்துவது தொடர்பாக பல மோசடி புகார்களும் எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
 

;