வெள்ளி, செப்டம்பர் 25, 2020

மாநிலங்கள்

புதுச்சேரி முதல்வரின் துணிச்சலுக்கு சிபிஎம் பாராட்டு

புதுச்சேரி, பிப்.13- குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு  எதிராக தீர்மானம் நிறைவேற்றிய புதுச்சேரி அரசுக்கு மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி பாராட்டு தெரி வித்துள்ளது. இதுகுறித்து பிரதேசச் செயலா ளர் ஆர்.ராஜாங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிறுப்பதாவது: இந்திய அளவில் எந்தப் பிரச்னை நடந்தாலும் அதற்கான சரி யான எதிர்வினையை முன்வைப்பது புதுச்சேரியின் தனிச்சிறப்பு. அந்த வகையில் புதுச்சேரியில் புதனன்று (பிப். 12)  கூடிய சிறப்பு சட்டப் பேர வைக் கூட்டத்தில், புதுச்சேரி அரசு புதுச்சேரி மக்களின் சார்பில்  மோடி அரசின் தேசவிரோத  குடியுரிமை திருத்தச் சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகைப் பதிவேடுகள் ஆகிய சட்டத் திருத் தங்களை திரும்பப்பெற வேண்டும் என்றும்  இந்தியாவில் உள்ள தாழ்த் தப்பட்டோர், பழங்குடியினர் மற்றும் பிற்படுத்தப்பட்டோருக்கான சமூக நீதியை நிலைநாட்டும் வகையில் இட ஒதுக்கீட்டு கொள்கையை அமுல்படுத்த வேண்டும்   ஆகிய தீர்மானங்களை நிறைவேற்றிய புதுவை அரசை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் வர வேற்கிறோம். புதுச்சேரி மக்களின் நலன்க ளுக்கு எதிராக தொடர்ந்து செயல் பட்டுவரும் கிரண்பேடி தனது பதவி யின் கன்னியத்தை மறந்து மோடி அர சின் ஏஜென்டாக  மாறி தனக்கு இல்லாத அதிகாரத்தைப் பயன்ப டுத்தி  புதுச்சேரி சட்டமன்றத்தில் இந்த  சட்டத்திற்கு எதிராக தீர்மானம் நிறை வேற்றக் கூடாது என்றும், இது அரசி யல் சட்டத்திற்கு முரானது என்றும், தவறான கருத்தை மக்களிடையே பரப்புவதோடு அரசை மிரட்டியும் இருந்தார்.  இந்நிலையில் புதுச்சேரி  அரசுக்கு, “இந்திய சட்ட விரி வாக்கத்தின்படி மத்திய அரசு அமல்படுத்திய எந்தவொரு சட்டத்தையும் நடைமுறைப்படுத்த வேண்டும் அல்லது நடைமுறைப்ப டுத்த வேண்டாம் என்று முடி வெடுக்கும் அதிகாரம் புதுவை அரசுக்கு உண்டு என்பதை அவர் திட்டமிட்டே மறைக்கிறார். அதேபோல் என்.ஆர்.காங்கிரஸ், அதிமுக ஆகிய கட்சிகள் வரலாற்று சிறப்புமிக்க இந்த தீர்மானத்தை ஆதரிக்காமல் புதுவை மக்களுக்கு தூரோகமிழைத்து இருக்கின்றன என்பதை மக்கள் உணர்ந்து கொள்ள வேண்டும். மோடி அரசு  நாட்டின் பொருளாதரா சீர்குலைவு,  வேலையின்மை, அயல்நாட்டு உறவுகளில் சிக்கல், பொதுத்துறை களை விற்பனை செய்வது, இந்திய ரூபாயின் மதிப்பு சரிவு என தனது அரசின்  தோல்வியை மறைக்கவும் இத்தகைய தேவையற்ற சட்டங் களை கொண்டுவருகிறது. தேசவிரோத குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக குரல்களை ஓங்கி ஒலிப்பது ஒட்டுமொத்த இந்தியக் குடிமக்களின் கடமை. அந்த கடமையின் ஒருபகுதியாக புதுவை சட்டமன்ற தீர்மானம் இடம்  பிடித்துள்ளது என்று மார்க்சிஸ்ட் கட்சி கருதுகிறது. எனவே புதுச்சேரி  மக்கள் இந்த சட்டத்திற்கு எதிராகவும்,  மத்திய அரசின் பொருளாதார சீர்கு லைவுகளுக்கு எதிராகவும் போரட முன்வர வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கேட்டுக் கொள்கிறது. இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.

;