ஞாயிறு, அக்டோபர் 25, 2020

மாநிலங்கள்

img

கடும் அடிவாங்கிய ஆட்டோ மொபைல் துறை

புதுதில்லி:

வேகமாக வளர்ந்து வந்த இந்திய ஆட்டோ மொபைல் துறை, மோடி ஆட்சியில் கடந்த 2 ஆண்டுகளாக கடும் வீழ்ச்சியைச் சந்தித்துள்ளது.


இந்திய ஆட்டோமொபைல் நிறுவனப் பங்குகள் மதிப்பு, கடந்த 2017-ஆம் ஆண்டு வரை வேகவேகமாக வளர்ந்து வந்தன. டிசம்பர் 2017 வரை வளர்முகத்திலேயே இருந்தன. ஆனால், 2018 ஜனவரி முதல் வளர்ச்சி குறையத் தொடங்கின. அப்போதிருந்து கடந்த 16 மாதங்களாக ஆட்டோமொபைல் நிறுவன பங்குகளின் மதிப்பு கடும் வீழ்ச்சிக்கு தள்ளப்பட்டிருக்கின்றன.


சந்தையில் தற்போது வாகனங்களுக்கான தேவை மிகவும் குறைந்துள்ளதால், முதலீட்டாளர்கள் ஆட்டோமொபைல் நிறுவனங்களில் முதலீடு செய்ய அஞ்சுகின்றனர். பயணிகள் வாகனங்களைப் பொறுத்தவரை, முன்னணி நிறுவனங்களான சுசுகி, மகிந்திரா அண்ட் மகிந்திரா நிறுவன பங்குகளே சுமார் 20 சதவிகிதம் வரை வீழ்ச்சி அடைந்துள்ளன. 

இவற்றின் காரணமாக, ஆட்டோ மொபைல் துறையில், கடந்த 16 மாதங்களில் 42 பில்லியன் டாலர்கள் இழப்பு ஏற்பட்டுள்ளது. இது இந்திய மதிப்பில் ரூ. 2 ஆயிரத்து 905 கோடியாகும். 


;