ஞாயிறு, அக்டோபர் 25, 2020

மாநிலங்கள்

img

ஷ்ராமிக் சிறப்பு ரயில்களில் பயணித்தபோது 97 பேர் உயிரிழப்பு 

கொரோனா காலங்களில் ஷ்ராமிக் சிறப்பு ரயில்களில் பயணித்தபோது 97 பேர் உயிரிழந்ததாக ரயில்வே அமைச்சர் பியூஷ் கோய்வால் கோயல் கூறியுள்ளார்.

உலகளவில், 30 மில்லியனுக்கும் அதிகமானோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவற்றில், 20 மில்லியனுக்கும் அதிகமானவர்கள் இதுவரை குணமடைந்துள்ளனர். நாடு தழுவிய ஊரடங்கின் வெளி மாநிலங்களில் இருந்து சொந்த மாநிலங்களுக்குச் செல்ல ஷ்ராமிக் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டது.

டி.எம்.சி எம்.பி. டெரெக் ஓ’பிரையன் எழுதிய எழுத்துப்பூர்வக் கேள்விக்குப் பதிலளித்த ரயில்வே அமைச்சர் பியூஷ் கோய்வால் கோயல், மாநிலக் காவல்துறை வழங்கிய அறிக்கையின் படி சிறப்பு ரயில்களில் பயணித்த  பயணிகளில் 9.9.220 வரை 97 பேர் உயிரிழந்து விட்டதாகக் கூறியுள்ளார்.

ஏற்கனவே, நாடாளுமன்றத்தில் கொரோனா காலத்தில் மருத்துவப்பணியில் ஈடுபட்ட மருத்துவர்களின் விபரங்கள், புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் பற்றிய விபரங்கள் குறிப்பிடப்படவில்லை. இதனால், அனைத்து எதிர்க்கட்சிகள் மற்றும் சமூக வலைதளங்களில் கடும் விமர்சனத்திற்கு ஆளானார்கள். மத்திய அமைச்சர்களின் இத்தகைய கருத்து குறித்து பல எதிர்க்கட்சி தலைவர்கள் டுவீட் செய்திருந்தனர். இந்த நிலையில் இன்றைய நாடாளுமன்ற கூட்டத்தொடரில் சிறப்பு ரயிலில் பயணம் செய்த வெளிமாநில தொழிலாளர்களில் இறந்தவர்களின் எண்ணிக்கையை கூறியுள்ளனர். இதனையும், சமூக வலைதளங்களில் கிண்டலடித்து வருகிறார்கள்.

;