வியாழன், அக்டோபர் 22, 2020

மாநிலங்கள்

img

72 குண்டுகள் முழங்க எஸ்பி பாலசுப்பிரமணியம் உடல் நல்லடக்கம்

பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் உடல் சென்னை செங்குன்றம் வீட்டில் அரசு மரியாதையுடன் 72 துப்பாக்கி குண்டுகள் முழங்க உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.

கொரோனா தொற்று காரணமாக சென்னை எம்ஜிஎம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார் எஸ்பி பாலசுப்பிரமணியம். இந்த சிகிச்சையானது  நாட்களுக்கும் 50 க்கும் மேலாக நடந்து வந்தது. இந்த நிலையில், வியாழனன்று இரவு அவரது உடல்நிலை மோசமடைந்தது. இதனால், வெள்ளியன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது உடல் சென்னை நுங்கம்பாக்கம் பகுதியில் உள்ள வீட்டிற்கு எடுத்து செல்லப்பட்டது.

அங்கு பொதுமக்கள் அஞ்சலி செலுத்தி வந்தனர். மக்கள் கூட்டம் அதிகரித்ததன் காரணமாக செங்குன்றத்தில் உள்ள தாமரைப்பாக்கம் பண்ணை வெட்டிற்கு வெள்ளியன்று எடுத்து சென்றனர். அங்கு அமைச்சர்கள், திரைத்துறையினர், பொதுமக்கள் என ஆயிரக்கணக்கானோர் அஞ்சலி செலுத்தினார்கள்.

எஸ்பிபி யின் உடல் அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்திருந்தார். இதனையடுத்து, ஆயுதப்படை காவல்துறை ஆணையாளர் திருவேங்கடம் தலைமையில் காவல்துறையினரின் 72 துப்பாக்கி குண்டுகள் முழங்க அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. இதில், 24 காவல்துறையினர் வானத்தை நோக்கி 3 முறை சுட்டு மரியாதை செலுத்தினார்கள். திரைப்பட பாடகர் மட்டுமல்லாது இவர் திரைப்பட இசை அமைப்பாளர்.  திரைப்படத் தயாரிப்பாளர், திரைப்பட நடிகர், திரைப்பட பின்னணிக் குரல் தருபவர் எனப் பன்முக அடையாளம் கொண்டவர். இந்திய அரசு இவருக்கு 2001 ஆம் ஆண்டில் பத்மஸ்ரீ விருதும் 2011 ஆம் ஆண்டில் பத்மபூஷண் விருதும் வழங்கியது. இவருக்கு 2016 ஆம் ஆண்டு 47 ஆவது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் இந்திய திரைப்பட பிரமுகர் விருது வழங்கப்பட்டுள்ளது.

;