வெள்ளி, செப்டம்பர் 25, 2020

மாநிலங்கள்

img

ஜார்க்கண்ட் சட்டமன்ற தேர்தல்: வாக்குச்சாவடிக்கு வெளியே துப்பாக்கி சூடு - ஒருவர் பலி

ஜார்க்கண்ட் மாநிலத்தில் இரண்டாம் கட்ட சட்டமன்றத் தேர்தல் நடைபெற்று வரும் நிலையில், வாக்குச்சாவடிக்கு வெளியே நடந்த துப்பாக்கி சூட்டில் ஒருவர் பலியானார்.

ஜார்க்கண்ட் மாநிலத்தில் இன்று இரண்டாம் கட்ட சட்டமன்றத் தேர்தல் நடைபெறுகிறது. 20 தொகுதிகளில் காலை 7 மணி முதல் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கும்லா மாவட்டம் சிசாய் தொகுதியில் உள்ள 36-வது வாக்குச்சாவடியில் நீண்ட நேரமாக வாக்களிக்க காத்திருந்த சிலர் கோபமடைந்து, வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது, பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த அதிரடிப்படை போலீசாரின் ஆயுதங்களை பறிக்க ஒருசிலர் முயற்சி செய்தபோது, அவர்கள் மீது போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலியானார். மேலும் 3 பேர் காயமடைந்தனர். அவர் உடனடியாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். இந்த சம்பவத்தால் வாக்குச்சாவடியில் பரபரப்பு ஏற்பட்டது.
 

;