மாநிலங்கள்

img

சிக்கிம் ஜனநாயக கட்சியை அப்படியே விழுங்கிய பாஜக!

காங்டாக்:
இந்தியாவில் தொடர்ந்து 24 ஆண்டுகள் முதல்வராக இருந்தவர் என்ற பெருமையை தோழர் ஜோதிபாசு பெற்றிருந்தார். தேர்தலில் தோற்காவிட்டாலும், தானாகவே முன்வந்து பதவி விலகிக் கொண்டார். இந்நிலையில், 1994-ஆம் ஆண்டு சிக்கிம் முதல்வரான பவன்குமார் சாம்லிங், கடந்த ஆண்டு தோழர் ஜோதிபாசுவின் சாதனையை முறியடித்து, 25 ஆண்டுகள் தொடர்ச்சியாக முதல்வராக இருந்தவர் என்ற பெருமையைப் பெற்றார். எனினும், 2019 ஏப்ரலில் நடைபெற்ற தேர்தலில் தோற்றுப் போனார். 

32 உறுப்பினர்களைக் கொண்ட சிக்கிமில், சாம்லிங் தலைமையிலான சிக்கிம் ஜனநாயக முன்னணிக்கு 15 எம்எல்ஏ-க்கள் கிடைத்தனர். சிக்கிம் கிரந்திகாரி மோர்ச்சா 17 எம்எல்ஏ-க்களுடன் புதிதாக ஆட்சிக்கு வந்தது. இதனிடையே, சாம்லிங் கட்சியைச் சேர்ந்த 2 எம்எல்ஏ-க்கள், ஆளும் சிக்கிம் கிரந்திகாரி மோர்ச்சாவுக்கு சாதகமாக பதவியை ராஜினாமா செய்ததால், சாம்லிங் எம்எல்ஏ-க்களின் எண்ணிக்கை 13 ஆக குறைந்தது.கிரந்திகாரி கட்சியைப் பார்த்த பாஜக, கர்நாடகா பாணியில், சிக்கிமிலும் தனது வேலையைக் காட்ட முடிவுசெய்தது. விளைவு, சாம்லிங் கட்சியைச்சேர்ந்த 10 எம்எல்ஏ-க்கள் கூண்டோடுபாஜகவில் சேர்ந்துள்ளனர். ஒருஎம்எல்ஏ கூட இல்லாத  பாஜகவுக்கு,ஒரே நாளில் 10 எம்எல்ஏ-க்கள் கிடைத்தனர். சாம்லிங் கட்சி எம்எல்ஏ-க்களின் எண்ணிக்கை, சாம்லிங்கையும் சேர்த்து3 ஆக குறைந்தது. இந்த அதிர்ச்சியிலிருந்து சாம்லிங் மீள்வதற்கு முன்பே,ஆளும் சிக்கிம் கிரந்திகாரி மோர்ச்சாவும், தன்பங்குக்கு 2 எம்எல்ஏ-க்களைசூறையாடியது. தற்போது ‘25 ஆண்டு முதல்வர்’ சாம்லிங், சிக்கிம் சட்டப்பேரவையில், தனி மரமாக்கப்பட்டுள்ளார்.

;