சனி, செப்டம்பர் 19, 2020

மாநிலங்கள்

img

70 லட்சம் பேருக்கு 2 மாத நல ஓய்வூதியம் கேரளத்தில் ஒவ்வொரு வீட்டிலும் ஓணப்பை

திருவனந்தபுரம், ஆக.11- கேரளத்தில் சுமார் 70 லட்சம் பேருக்கு ஜுலை, ஆகஸ்ட் மாதங் களுக்கான சமூகநல ஓய்வூதியம் தலா ரூ.2,600 வீதம் ஓணம் பண்டி கைக்கு முன்னதாவே வழங்கப் பட உள்ளது. தற்போது, மே மற் றும் ஜூன் மாதங்களுக்கான ஓய்வூ தியம் வழங்கப்படுகிறது. அனை த்து வீடுகளிலும் உணவுப்பொருட் கள் அடங்கிய ஓணப்பை ஒப்ப டைக்கவும் கேரள அரசு முடிவு செய்துள்ளதாக நிதி அமைச்சர் தாமஸ் ஐசக் தெரிவித்தார். ஓணச்சலுகைகள் இந்த முறையும் தொடரும் என்று நிதி யமைச்சர் தாமஸ் ஐசக் கூறி னார். போனஸ், பண்டிகை அல வன்ஸ், முன்பணம் போன்ற பல் வேறு சலுகைகள் ஊழியர்களும் தொழிலாளர்களும் முன்பு பெற்று வந்தனர். வேலை உறுதி திட்டத் தில் 100 நாட்கள் வேலையை நிறைவு செய்யும் தொழிலாளர் களுக்கும் தலா ரூ .1000 வழங் கப்பட்டது. கோவிட்கால நெருக் கடியில் கூட இதையெல்லாம் உறுதி செய்ய முயற்சிகள் மேற் கொள்ளப்படுகின்றன. மீன்பிடிக்கத்தடை, கோவிட் ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள கடலோரப் பகுதிகளில் இப் போது உணவுப்பொருட்கள் அடங்கிய சிறப்பு பைகள் வழங் கப்படுகின்றன. தலா ரூ.3000 பஞ்சகால உதவியாகவும் வழங்கப்படுகிறது.
ஒவ்வொரு வீட்டிலும் ஓணப்பை
எந்தவொரு நிதி உதவியும் பெறாத 14 லட்சத்துக்கும் மேற் பட்ட குடும்பங்களுக்கு ஊர டங்கின்போது தலா ரூ .1000 வழங்கப்பட்டது. ஓணத்திற்காக ஒவ்வொரு வீட்டிற்கும் உணவுப் பைகள் விநியோகிக்கவும் முடிவு செய்யப்பட்டது. இருப்பினும், நெருக்கடி ஏற்பட்டால், சமுதாய சமையலறைகள் அல்லது பொது உணவகங்கள் மூலம் உணவு வழங்கவும் அரசு உத்தரவிட்டுள் ளது. உள்ளாட்சி அமைப்புகளின் திட்ட ஒதுக்கீடும் இதற்கு பயன் படுத்தப்படலாம். ஓணத்தின் போது பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ அரசின் நிதிச் சிக்கல்கள் தடையாக இருக்காது என்றும் நிதியமைச்சர் கூறினார்.

;