புதன், அக்டோபர் 21, 2020

பொருளாதாரம்

img

இந்தியாவிலிருந்து வெளியேறும் ஹார்லி டேவிட்சன் நிறுவனம்!

இந்திய சந்தையிலிருந்து விற்பனை மற்றும் உற்பத்தியை முழுமையாக நிறுத்துவதாக ஹார்லி டேவிட்சன் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. 
அமெரிக்க இருசக்கர வாகன தயாரிப்பு நிறுவனமான ஹார்லி டேவிட்சன் இந்தியாவில் கடந்த 2009 ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வந்தது. தி ரிவைர் என்ற எதிர்கால திட்டம் மூலம், குறைந்த விற்பனை மற்றும் குறைந்த உற்பத்தி உள்ள சந்தைகளிலிருந்து வெளியேறுவதாக அந்நிறுவனம்  அறிவித்திருந்தது இந்நிலையில் இந்திய சந்தையிலிருந்து விற்பனை மற்றும் உற்பத்தியை முழுமையாக நிறுத்துவதாக அந்நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இந்தியாவில் கடந்த நிதியாண்டில் 2,500 க்கும் குறைவான  வாகனங்களை மட்டுமே விற்பனை செய்திருந்தது. இது சர்வதேச சந்தைகளில் மிகக் குறைவான வாகனங்களை விற்பனை செய்த மோசமான சந்தைகளில் இந்தியாவும் ஒன்றாகும். 
வெளியேறினாலும் விற்பனை செய்யப்பட்ட வாகனங்களுக்கு டீலர்கள் மூலமாக தொடர்ந்து சேவை வழங்கப்படும் என இந்நிறுவனத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
மேலும் ஹரியாணாவின் பவலில் உள்ள இந்நிறுவனத்தின் தொழிற்சாலையை மூட உள்ளது. இதனால் இந்தியாவில் 70 பணியாளர்களுக்கும் மேல் வேலை போகும் அபாயம் உள்ளது. 

;