சனி, செப்டம்பர் 26, 2020

பொருளாதாரம்

img

மோடி விற்கத் துடிக்கும் ஓஎன்ஜிசி அபாரம்....பொதுத்துறை நிறுவனங்கள் 20 சதவிகித வளர்ச்சி

புதுதில்லி:
இந்தியாவின் ஒட்டுமொத்த பொருளாதாரமே கடும் சரிவைச் சந்தித்து வரும்நிலையில், நாட்டின் முக்கிய பொதுத்துறை நிறுவனங்கள் லாபமீட்டியுள்ளன.கடந்த 2017-18 நிதியாண்டை விட,2018-19 நிதியாண்டில் பொதுத்துறை நிறுவனங்கள் 20 சதவிகித வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளன. இவற்றில், மத்திய அரசு தனியாருக்கு விற்பத் துடிக்கும் ஓஎன்ஜிசி அதிகபட்ச லாபத்தை ஈட்டியுள்ளது.வருடாந்திர அடிப்படையில் பொதுத்துறை நிறுவனங்கள் மத்தியில் ஒவ்வொரு ஆண்டும் ஆய்வு (Public Enterprises Survey) நடத்தப் படும். எந்தெந்த பொதுத்துறை நிறுவனம் எவ்வளவு லாபம் மற்றும் நஷ்டம்அடைந்துள்ளது என்பதை ஆய்வுசெய்வதே இந்தச் சர்வே-யின் முக்கியமான நோக்கம். அந்த அடிப்படையில் 2018-19 நிதியாண்டுக்கான பொதுத் துறை நிறுவன ஆய்வறிக்கை தற் போது வெளியாகியுள்ளது.இதில், 2018-19ஆம் நிதியாண்டில் இந்திய எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகம் எனப்படும் ஒஎன்ஜிசி(Oil and Natural Gas Corporation) நிறுவனம் அதிகபட்ச லாபத்தை பெற் றுள்ளது. அனைத்துப் பொதுத்துறை நிறுவனங்களின் மொத்த லாபத்தில் ஓஎன்ஜிசி நிறுவனம் மட்டும் சுமார்15.3 சதவிகித லாபத்தைக் கொடுத் துள்ளது.

அதைத்தொடர்ந்து இந்திய எண்ணெய்க் கழகம் (Indian Oil Corporation) 9.68 சதவிகிதமும், தேசியஅனல்மின் கழகம் எனப்படும் என்டிபிசி(National Thermal Power Corporation Limited) 6.73 சதவிகிதமும் லாபம் சம்பாதித்துள்ளன.2017-18 நிதியாண்டில் பொதுத் துறை நிறுவனங்கள் சுமார் 20 லட்சத்து32 ஆயிரத்து 1 கோடி ரூபாய் வருவாய்ஈட்டியிருந்தன. இது 2018-19 நிதியாண் டில் 24 லட்சத்து 40 ஆயிரத்து 748 கோடிரூபாயாக உயர்ந்துள்ளது. இந்த உயர்வுசுமார் 20.12 சதவிகித வளர்ச்சி ஆகும்.இந்த வருவாயின் ஊடாக, கலால் வரி, சுங்க வரி, ஜிஎஸ்டி, கார்ப்பரேட் வரி, கடன்களுக்கான வட்டி, ஈவுத் தொகை மற்றும் பிறவற்றின் மூலம் மத்திய அரசின் கருவூலத்திற்கு மட்டும் 2018-19 நிதியாண்டில் 3 லட்சதது 68 ஆயிரத்து 803 கோடி ரூபாய் கிடைத்துள்ளது.இது முந்தைய 2017 - 18 நிதியாண்டில் கிடைத்த 3 லட்சத்து 52 ஆயிரத்து 361 கோடி ரூபாயை விட 4.67 சதவிகிதம் அதிகமாகும்.

2018-19 நிதியாண்டில் பிஎஸ்என்எல்,ஏர் இந்தியா, எம்டிஎன்எல் ஆகிய பொதுத்துறை நிறுவனங்கள் அதிகளவு இழப்பைச் சந்தித்துள்ளதாகவும் ஆய்வில் கூறப்பட்டுள்ளது. அதிகபட்சமாக பிஎஸ்என்எல் (BSNL) 14 ஆயிரத்து 904 கோடியே 24 லட்சம், எம்டிஎன்எல் (MTNL) 3 ஆயிரத்து 390 கோடியே 20 லட்சம், பொதுத்துறை விமான சேவை நிறுவனமான ‘ஏர் இந்தியா’ 8 ஆயிரத்து 474 கோடியே80 லட்சம் என நஷ்டத்தைச் சந்தித்துள் ளன.2017-18 நிதியாண்டில் லாபத்தைத் தந்த ஸ்டேட் டிரேடிங் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா, எம்எஸ்டிசி மற்றும்சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் ஆகிய நிறுவனங்களும் 2018-19நிதியாண்டில் இழப்பைச் சந்தித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.

;