செவ்வாய், அக்டோபர் 27, 2020

பொருளாதாரம்

img

வங்கதேசத்தை விடவும் கீழே போன இந்தியாவின் தனிநபர் ஜிடிபி... மக்களின் வாழ்க்கையைக் குலைத்துப்போட்ட மோடியின் 5 ஆண்டுகால ஆட்சி.... ஐஎம்எப் அறிக்கை

புதுதில்லி:
கொரோனாவால் இந்தியாவின் உள்நாட்டு உற்பத்தி மதிப்பு (Gross domestic product - GDP) கடுமையாக சரிந்துள்ளது. கடந்த வாரம் இதுபற்றி அறிக்கை வெளியிட்ட உலக வங்கி (World Bank), இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி நடப்பு 2020-ஆம் ஆண்டில் மைனஸ் 9.6 சதவிகிதம் என்ற அளவிற்கு வீழ்ச்சியைச் சந்திக்கும் என்று கூறியிருந்தது.

தெற்காசியாவிற்கான உலக வங்கியின் தலைமை பொருளாதார வல்லுநர் ஹான்ஸ் டிம்மரும், “இந்தியாவின் நிலைமை முன்பு கணித்ததைவிட மிகவும் மோசமாக உள்ளது. இது இந்தியாவிற்கு இதுவரை ஏற்படாத ஒரு நிலைமை. மிகவும் மோசமான நிலைமை” என்று தெரிவித் திருந்தார்.இந்நிலையில் சர்வதேச நாணயநிதியமான ஐஎம்எப்-பும் (Interna tional Monetary Fund) உலகப் பொருளாதாரம் தொடர்பான தனதுகணிப்பை (World Economic Out look) தற்போது வெளியிட்டுள்ளது.அதில், இந்த ஆண்டு உள்நாட்டு உற்பத்தி பெரிய அளவில் சரிந்துள்ளதால், இந்தியாவின் பொருளாதாரம் தற்போதுள்ள அளவில் இருந்து 10.3 சதவிகிதம் அளவுக்கு மிகப்பெரிய சரிவை சந்திக்கும்என தெரிவித்துள்ளது.இதில் அதிர்ச்சிகரமான விஷயம்,2020 ஆம் ஆண்டிற்கான தனி நபர் ஜிடிபி-யில் (per capita GDP), வங்கதேசத்தை விடவும் இந்தியா பின்னடைவைச் சந்திக்கும் என்று ஐஎம்எப்கூறியிருப்பதுதான்.2020-ஆம் ஆண்டில், வங்க தேசதனிநபர் பொருளாதார வளர்ச்சி டாலர் மதிப்பில் 4 சதவிகிதம் அதிகரித்து 1,888 டாலர்களாக இருக்கும்என்று கூறியுள்ள ஐஎம்எப், அதேநேரம் இந்தியத் தனிநபர் பொருளா தார வளர்ச்சி 10.5 சதவிகிதம் சரிந்து,1,887 டாலர்களாக குறையும் எனத் தெரிவித்துள்ளது.வித்தியாசம் என்று பார்த்தால், வெறும் 1 டாலர்தானே என்று தோன்றும். ஆனால், இந்தியா இதற்கு முன்பு எவ்வளவு உயரத்தில்இருந்தது என்பதைப் பார்த்தால் தான், தற்போது எந்த அளவிற்கு விழுந்துள்ளது என்பதை அறிய முடியும். 

அப்படிப் பார்க்கையில், சுமார் 5 ஆண்டுகளுக்கு முன்பு, அதாவதுமோடி ஆட்சிக்கு வரும்போது இந்தியாவின் தனி நபர் பொருளாதார வளர்ச்சி அண்டை நாடான வங்க தேசத்தை விட 40 சதவிகிதம் அதிகம்.ஆனால், மோடி பிரதமரானதற்குப் பிறகு, இந்தியாவின் தனிநபர் வருமானம் வங்கதேசத்தை விடவும் கீழ்நிலைக்குச் சென்றுள்ளது.கடந்த 5 ஆண்டுகளில் இந்தியா வின் தனிநபர் ஜிடிபி 3.2 சதவிகிதம் மட்டுமே அதிகரித்துள்ளது. வங்க தேசத்தின் தனிநபர் ஜிடிபி-யோ 9.1 சதவிகிதமாக உயர்ந்துள்ளது.   வங்கதேசம் ஏற்றுமதி மூலமாக, தனது மிகப் பெரிய அண்டை நாடான இந்தியாவை விட பொருளாதாரத்தில் சிறப்பான வளர்ச்சியைப் பெற்றுள்ளது. இந்தியாவில் இந்த 5ஆண்டுகளில் ஏற்றுமதி வெகுவாக குறைந்துள்ளது.

தெற்காசியாவில் வங்கதேசம் மட்டுமன்றி, பூடான், இலங்கை, மாலத்தீவு ஆகிய நாடுகளும் கூட நடப்பாண்டில் இந்தியாவைக் காட்டிலும் கூடுதலான பொருளாதார வளர்ச்சியைப் பதிவுசெய்யும் என்று கூறியுள்ள ஐஎம்எப், தெற்காசிய நாடுகளில் பாகிஸ்தான், நேபாள் ஆகிய நாடுகள் மட்டுமே இந்தியாவைக் காட்டிலும் குறைந்த பொருளாதார வளர்ச்சி கொண்டவையாக இருக்கும் என்று தெரிவித்துள்ளது.ஆறுதலாக, 2021-இல் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி விகிதம்- சீனாவின் எதிர்பார்க்கப்படும் பொருளாதார வளர்ச்சி விகிதமான 8.2 சதவிகிதத்தை விட அதிகமாக 8.8 சதவிகிதமாக இருக்கும் என ஐஎம்எப் கூறியுள்ளது.

;