சனி, செப்டம்பர் 19, 2020

பொருளாதாரம்

img

2021-இல் மிகப்பெரிய கடனாளி நாடாக இந்தியா இருக்கும்... ‘மூடிஸ்’ நிறுவனம் சொல்கிறது

புதுதில்லி:
வளரும் நாடுகளில் அதிக கடன் வாங்கும் நாடாக 2021-ஆம் ஆண்டில் இந்தியா இருக்கும் என்று, பொருளாதார தர மதிப் பீட்டு நிறுவனமான ‘மூடீஸ்’ (Moody’s) தெரிவித்துள்ளது.

இந்தியா, பிரேசில், தென் ஆப்பிரிக்கா போன்றவை வளர்ந்து வரும் பெரிய நாடுகளாக உள்ளன. இந்நிலையில், இந்த பெரியநாடுகளின் கடன், 2019-ஆம் ஆண்டின் அளவை விட, 2021-ஆம் ஆண்டின் முடிவில்,சராசரியாக 10 சதவிகிதம் வரை அதிகரிக்கலாம் என்று மூடிஸ் குறிப்பிட்டுள்ளது.

இவற்றில் சில நாடுகள் ஏற்கெனவே அதிக கடன் வாங்கி இருப்பதால் அதிகம் வட்டி செலுத்த வேண்டி வரலாம். இதனாலும் கடன் மேலும் அதிகரிக்கலாம் என்று மூடிஸ் தெரிவிக்கிறது.2021-ம் ஆண்டு வாக்கில், பிரேசில், இந்தியா, தென் ஆப்பிரிக்கா ஆகிய நாடுகளின் கடன் சுமை, வளரும் நாடுகளிலேயே, அதிகமாக இருக்கும். ஏனெனில் இந்தியா, மெக்ஸிகோ, தென் ஆப்பிரிக்கா, துருக்கி ஆகிய நாடுகளில், நிதித் துறை பலவீனமாக இருக்கிறது. அதோடு சில நாடுகளில் நிரந்தரமான செலவுப் பிரச்சனைகளும் இருக்கின்றன. இந்த பிரச்சனைகள், மேலே சொன்ன நாடுகளின் சிக்கலை அதிகப்படுத்துகின்றன என்றும் ‘மூடிஸ்’ குறிப்பிட்டுள்ளது.

;