புதன், அக்டோபர் 21, 2020

பொருளாதாரம்

img

இந்தியாவின் ஜிடிபி 9.6% வீழ்ச்சியைச் சந்திக்கும்... உலக வங்கியின் ஆய்வறிக்கையில் தகவல்

புதுதில்லி;
இந்தியாவின் பொருளாதார வளா்ச்சி நடப்பாண்டில் மைனஸ் 9.6 சதவிகிதம் என்றஅளவிற்கு வீழ்ச்சியைச் சந்திக்கும் என்று உலக வங்கி(World Bank) தெரிவித்துள்ளது.உலக வங்கி மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் வருடாந்திரக் கூட்டத்துக்கு முன்பாக தெற்காசிய நாடுகளுக் கான பொருளாதார நிலை குறித்த அறிக்கையை வியாழக்கிழமையன்று உலக வங்கி வெளியிட்டுள்ளது. அதில்மேலும் கூறப்பட்டிருப்பதாவது:தெற்காசிய மண்டலத் தின் பொருளாதாரம் கடந்தஐந்தாண்டுகளில் ஆண்டுக்கு 6 சதவிகிதம் என்ற அளவில்உயர்ந்த வளா்ச்சி விகிதத்தைஎட்டி வந்தது. இந்நிலையில்,கொரோனா தொற்றுப் பரவல்அதனை முற்றிலுமாக புரட்டிப் போட்டுள்ளது. நடப்பு 2020-ஆம் ஆண்டில் இம்மண்டலத்தின் பொருளாதார வளர்ச்சி விகிதமானது (மைனஸ்) 7.7 சதவிகிதம் என்ற அளவில் பின்னடைவைச் சந்திக்கும் சூழல் உருவாகியுள்ளது.

குறிப்பாக, கொரோனா பேரிடரால் இந்தியாவின் வளர்ச்சி விகிதம் முன்னெப்போதும் இல்லாத மோசமான நிலைக்குசென்றுள்ளது. பொதுமுடக் கம் காரணமாக பெரும்பாலான நிறுவனங்கள் செயல் பட முடியாமல் போனதால், இந்திய குடும்பங்களின் வருமானம் குறைந்து நிதிநிலை மோசமாகி விட்டது. இதற்குமுன்னர் இதுபோன்ற மோசமான நிலை ஏற்படவில்லை. நடப்பாண்டின் இரண்டாவது காலாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தி 25 சதவிகிதம் அளவுக்கு சரிவைச் சந்தித்திருப்பது, இதற்கு எடுத் துக்காட்டாகும்.எனவே, இதுபோன்ற சூழல்களை வைத்து மதிப்பிடும் போது, நடப்பாண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி (-) 9.6 சதவிகிதம்என்ற அளவில் பின்னடைவை சந்திக்கும் என எதிர்பார்க்கப் படுகிறது. 2021 ஆண்டு வாக்கில் தான், இந்தியாவின் ஜிடிபி 4.1சதவிகிதம் வளர வாய்ப்புள் ளது. தெற்காசிய மண்டலநாடுகளின் பொருளாதாரமும் 4.5 சதவிகிதமாக அதிகரிக்கும்.இவ்வாறு உலக வங்கி தெரிவித்துள்ளது.

;