சனி, செப்டம்பர் 26, 2020

பொருளாதாரம்

img

சென்னையில் மானியமில்லாத சிலிண்டர் விலை 147 ரூபாய் வரை உயர்வு!

சென்னையில், மானியமில்லாத சிலிண்டர்கள் விலை 147 ரூபாய் வரை உயர்த்தப்படுவதாக இண்டேன் நிறுவனம் அறிவித்துள்ளது.

இந்தியா முழுவதும் தினந்தோறும் 30 லட்சம் சிலிண்டர்களை விற்பனை செய்யும் இண்டேன் நிறுவனம், மானியமில்லாத சிலிண்டர் விலை உயர்த்தப்பட்டுள்ளதாக அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி, வீட்டு உபயோகத்திற்கு பயன்படுத்தப்படும் 14.2 கிலோ மானியமில்லாத சிலிண்டரின் விலை சென்னை, மும்பை, டெல்லி, கொல்கத்தா ஆகிய நகரங்களில் உயர்த்தப்பட்டுள்ளது.

டெல்லியில், ரூ.714 ஆக இருந்த ஒரு சிலிண்டரின் விலை ரூ.144.5 உயர்த்தப்பட்டு ரூ.858.5 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. அதே போல், கொல்கத்தாவில் ரூ.149 உயர்த்தப்பட்டு ரூ.896 ஆகவும், மும்பையில் ரூ.145 உயர்த்தப்பட்டு ரூ.829.5 ஆகவும், சென்னையில் ரூ.147 உயர்த்தப்பட்டு ரூ.881 ஆகவும் உள்ளது. இந்த விலை உயர்வு, இன்று (பிப்ரவரி.12) முதல் நடைமுறைக்கு வருகிறது என்று இண்டேன் நிறுவனம் தெரிவித்துள்ளது.

;