சனி, செப்டம்பர் 26, 2020

பொருளாதாரம்

img

தமிழக சட்டப்பேரவையில் இன்று பட்ஜெட் தாக்கல்

சென்னை,பிப்.13- தமிழக அரசின் 2020-21 நிதியாண்டுக்கான பட்ஜெட்டை வெள்ளியன்று (பிப்.14) காலை 10 மணிக்கு துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் சட்டப்பேரவையில்  தாக்கல் செய்கிறார்.  அதிமுக ஆட்சி காலம் அடுத்து ஆண்டு மே மாதம் நிறை வடைய உள்ளது. அதன்பிறகு பொதுத்தேர்தல் நடைபெறும்.  இதனால் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் இடைக்கால பட்ஜெட் தான் தாக்கல் செய்ய முடியும்.அடுத்த ஆண்டு சட்டப்பேரவை தேர்தலுக்கு முந்தைய முழு பட்ஜெட் என்பதால் பல்வேறு முக்கிய அறிவிப்புகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு ஓய்வூதிய திட்டம்  உள்ளிட்ட புதிய அறிவிப்புகள் இடம் பெறலாம் என்று எதிர்  பார்க்கப்படுகிறது. நீர்நிலைகளில் நடைபெறும் குடி மராமத்துப் பணிகளுக்காக கூடுதல் நிதி ஒதுக்கப்படும் என்றும்,  புதிய மாவட்டங்கள், தாலுகாக்கள் குறித்த அறிவிப்பு வெளி யாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த 2019-20 பட்ஜெட்டில் வருவாய் பற்றாக்குறை 14 ஆயி ரத்து 315 கோடி ரூபாயாக இருந்தது. நிதிநிலை பற்றாக் குறையை படிப்படியாக குறைப்பதற்கு வாய்ப்பு ஏற்படும்  என்றும் அரசு அறிவித்திருந்தது. கடன்சுமை 3 புள்ளி 97  லட்சம் கோடி என்றும் அந்த பட்ஜெட்டில் கணக்கிடப்பட்டி ருந்தது குறிப்பிடத்தக்கதாகும். பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட பிறகு பேரவையின் அலு வல் ஆய்வு குழு கூடுகிறது. இந்த கூட்டத்தில், பட்ஜெட் மீதான  விவாதத்தை எத்தனை நாட்கள் நடத்துவது என்று முடிவு செய்யும். பட்ஜெட் மீதான விவாதத்தில் குரூப்-4 தேர்வு  முறைகேடு, குடியுரிமை திருத்த சட்ட பிரச்சனை உள்பட  பல்வேறு பிரச்சனைகளை எழுப்ப எதிர்கட்சிகள் திட்ட மிட்டுள்ளது.இதனால் இந்த கூட்டத்தொடர் மிகவும் பர பரப்பாக காணப்படும்.

;