சனி, செப்டம்பர் 19, 2020

பொருளாதாரம்

img

நடப்பாண்டில் இந்தியப் பொருளாதாரம் வளர வாய்ப்பே இல்லை..... சர்வதேச தர மதிப்பீட்டு நிறுவனமான ‘பிட்ச் ரேட்டிங்ஸ்’ ஆய்வில் தகவல்

புதுதில்லி:
நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கம் குறையாமல் இருப்பது, தொடரும் ஊரடங்கு போன்றவற்றால் நடப்பு நிதியாண்டில் இந்தியப் பொருளாதாரம் வளர்வதற்கு வாய்ப்பே இல்லை என்று ‘பிட்ச்ரேட்டிங்ஸ்’ (Fitch Ratings) நிறுவனம் தனது ஆய்வில்கணித்துள்ளது.இந்தியாவின் பொருளாதாரம் நடப்பு 2020-21 நிதியாண்டில் மைனஸ் 10.5 சதவிகிதமாக வீழ்ச்சி அடையும்என்று ‘பிட்ச் ரேட்டிங்ஸ்’ கூறியுள்ளது.கொரோனா தொற்றுப் பரவலைத் தடுக்கும் விதமாக அமல்படுத்தப்பட்ட ஊரடங்கால் நடப்பு நிதியாண்டின் முதல்காலாண்டில் (ஏப்ரல் - ஜூன்) நாட்டின் பொருளாதாரம் மைனஸ் 23.9 சதவிகிதம் அளவிற்கு கடும்வீழ்ச்சி அடைந்திருப்பதாக மத்திய புள்ளியியல் அலுவலகம் அண்மையில் அறிக்கை அளித்திருந்தது. 

அதைத் தொடர்ந்து சர்வதேச கடன் தர நிர்ணய நிறுவனமான ‘பிட்ச் ரேட்டிங்ஸ்’ நிறுவனமும் இந்தியாவின்பொருளாதார வளர்ச்சி குறித்து தனது முன்கணிப்பைவெளியி்ட்டுள்ளது. அதில் கூறப்பட்டிருப்பதாவது:இந்தியாவில் புதிதாக கொரோனா நோயாளிகள் உருவாகி வருகிறார்கள். இன்னும் சில மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் கட்டுப்பாடுகள் தளத்தப்படவில்லை. இவை பொருளாதார வளர்ச்சியையும், செயல்பாடுகளையும் கடுமையாகப் பாதிக்கிறது.ஊரடங்கு நடவடிக்கை ஏற்கெனவே இந்தியக்குடும்பங்களில் மோசமான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது, கார்ப்பரேட் நிறுவனங்களின் வருவாய், வரவு- செலவு அறிக்கை, ஆகியவையிலும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன.அதுமட்டுமல்லாமல் நாட்டில் அதிகரித்து வரும் பணவீக்கம், பொருட்கள் சப்ளையில் சிக்கல், கலால்வரி போன்றவை பொருட்களின் விலை உயர்வுக்கு காரணமாக இருக்கின்றன.இந்தியா, குறுகிய காலம் மற்றும் நீண்ட காலத்தில்மீண்டும் பொருளாதாரத்தை வளர்ச்சிப் பாதைக்குத் திருப்ப வேண்டுமானால் ஏராளமான சவால்களைச் சந்திக்க வேண்டியுள்ளது.

இதனால் நடப்பு நிதியாண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி, மைனஸ் 10.5 சதவிகிதமாகவீழ்ச்சி அடைய வாய்ப்புள்ளதாகக் கணித்துள்ளோம். இதற்கு முன் ஜூன் மாதத்தில் மைனஸ் 5 சதவிகிதம்என்று கணித்திருந்தோம்.2-வது (ஜூலை - செப்டம்பர்) காலாண்டில் பொருளாதாரம் மைனஸ் 9.6 சதவிகிதமாகவும், 3-வது காலாண்டில் (அக்டோபர் - டிசம்பர்) மைனஸ் 4.8 சதவிகிதமாகவும் வீழ்ச்சி அடையும். நான்காவது (2021 ஜனவரி - மார்ச்) காலாண்டில் 4 சதவீதமாக வளரும் எனக் கணித்துள்ளோம். ஒட்டுமொத்தமாக நடப்புநிதியாண்டில் மைனஸ் 10.5 சதவிகிதம் பொருளாதாரம் வீழ்ச்சி அடையும். இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

;