திங்கள், அக்டோபர் 26, 2020

பேஸ்புக் உலா

img

தேசத்தின் படுமோசமான பொருளாதார நிலைமை Yes Bank மூலம் சிறு கீறலாக இப்போது வெடித்திருக்கிறது -மாதவராஜ்

இந்தியாவின் நான்காவது பெரிய பிரைவேட் வங்கியான Yes Bank லிருந்து வாடிக்கையாளர்கள் இனி ஐம்பதினாயிரம் ருபாய்க்கு மேல் பணம் எடுக்க முடியாது என அறிவிக்கப்பட்டு இருக்கிறது. “யாரும் பயப்படத் தேவையில்லை, விரைவில் நிலைமைகளில் மாற்றத்தைக் கொண்டு வரும் திட்டங்கள் இருக்கின்றன” என ரிசர்வ் வங்கி சொல்கிறது.

கடந்த ஒரு வருடமாகவே, Yes Bankன் நிலைமை கவலைக்கிடமாகவே இருந்திருக்கிறது. டெபாசிட் குறைந்திருக்கிறது. முதலீடுகளை ஈர்க்க முடியவில்லை. பொய்யான புள்ளி விபரங்களால் உண்மைகள் பூசி மெழுகப்பட்டு இருக்கின்றன.

ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதம் இது. தேசத்தின் பொருளாதாரமும் ஏறத்தாழ இதே நிலைதான். இதே பொய் பூசல்தான். மழுப்பல்தான்.

மக்கள் அது பற்றி சிந்திக்கக் கூடாது, பேசக் கூடாது என்றுதான் மோடியும், அமித்ஷாவும் ராமர் கோவில், காஷ்மீர், குடியுரிமை திருத்தச் சட்டம், டெல்லி வன்முறைகள் என மக்களை வேறொரு இடத்தில் கொண்டு போய் பதற்றத்தில் வைத்திருக்கிறார்கள்.

எல்லாவற்றையும் மீறி, தேசத்தின் படுமோசமான பொருளாதார நிலைமை Yes Bank மூலம் சிறு கீறலாக இப்போது வெடித்திருக்கிறது.

-

;