புதன், அக்டோபர் 21, 2020

பேஸ்புக் உலா

img

கொரோனாக்கும் குடும்ப வன்முறைக்குமான வித்தியாசம்?

பெண்ணடிமை எல்லாம் இப்ப எங்கங்க இருக்குன்னு கேட்கும் அப்பாவிகளே...! இன்றும் சமூகம் பெண்களுக்கு பட்டு கம்பளம் எல்லாம் விரிக்கவில்லை என்பதை ஊரடங்கு காலத்தில் பெண்கள் மீதான குடும்ப வன்முறை அதிகரித்துள்ளது என்ற தேசிய மகளிர் ஆணையம் உறுதிப்படுத்திய செய்தி தெளிவாக்கி உள்ளது.
ஊரடங்கு அமல்படுத்திய போதே பாவம் பெண்கள் என்று மனதிற்குள் தோன்றினாலும் அந்த களேபரத்தில் வேண்டாம் என்று விட்டுவிட்டேன்.
வீட்டிலேயே இருக்கும் பெண்களைப் பொருத்தமட்டில் 21 நாட்கள் என்பதும் வழக்கம் போல்தான்... என்ன வாரத்துக்கு இரண்டு நாட்கள் துடைக்கும் வீட்டை தினமும் துடைக்கணும். கொரோனா அச்சத்தால் இப்ப ஜன்னல் கதவுகளையும் ஜன்னல்களையும் சேர்த்து துடைக்கணும். 11 மணிக்கு போடுற டீயை கூட 4 டம்ளர் சேர்த்து போடணும் இப்படி காலை முதல் இரவு வரை சம்பளம் வாங்காத வேலையை கொஞ்சம் கூட்டி விட்டுருச்சு கொரோனா... இது இயல்பாக மனைவி மேல் ஓரளவேனும் மரியாதை உள்ள குடும்பங்கள்ல... ஆனால் மற்ற இடங்களில் குடும்ப வன்முறை இன்றும் குறைந்த பாடில்லை...
இன்றைய அவசர யுகத்தில் அந்த குரூரம் வெளியில் தெரிவதில்லை... காரணம் பெரும்பாலான பெண்கள் வருமானம் ஈட்டும் வேலைக்கு செல்கின்றனர். அதனால் வீட்டில் இருக்கும் நேரம் குறைவு... பாதிக்கப்பட்ட பெண்களை பொறுத்தமட்டில் இந்த கொரோனா வைரசும் குடும்பமும் ஒன்னுதா என்ன கொரோனா வந்தா ஒரு மாசத்துல குணமாகிடும்.... இல்ல உயிரை ஒரே அடியாக கொண்டு போயிடும். ஆனா தனிமைப்படுத்துதல்ன்ற பெயரிலாவது கொஞ்சம் ஓய்வு கிடைக்கும்.... ஆனா கொடூரமான இந்த குடும்ப வன்முறை வைரஸ் இருக்கே... அது ஊரே அடங்கினாலும் அடங்காது..... அம்புட்டுதா...

-Eswariguru

;