வெள்ளி, செப்டம்பர் 25, 2020

தேர்தல் 2019

img

ராஜீவ் காந்தி கொலை குறித்து சர்ச்சை பேச்சு - சீமான் மீது வழக்கு பதிவு

ராஜீவ் காந்தி கொலை குறித்து பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

விக்கிரவாண்டி தொகுதியில் இடைத்தேர்தலுக்கான வாக்கு சேகரிப்பு நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நேற்று நாம் தமிழர் கட்சி வேட்பாளரை ஆதரித்து, அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியுள்ளார். அப்போது பேசிய சீமான் ””ராஜீவ் காந்தி இந்திய அமைதிப்படை என்கிற அநியாயப் படையை அனுப்பி என் இன மக்களைக் கொன்று குவித்தார் என சர்ச்சையாக பேசியுள்ளார். இதை வன்மையாக கண்டித்த காங்கிரஸ் கட்சியினர், ராஜீவ் காந்தி கொலையை நியாயப்படுத்துவது போல் பேசிய சீமான் மீது நடவடிக்கை எடுக்குமாறு புகார் அளித்தனர். இந்த புகாரின் அடிப்படையில் 2 பிரிவுகளின் கீழ் சீமான் மீது வழக்கு பதிவுசெய்யப்பட்டுள்ளது. 
 

;