தேசம்

img

பெண் பத்திரிகையாளருக்கு வல்லுறவு கொடுமை..

ஹைதராபாத்:
பெண் பத்திரிகையாளருக்கு மயக்க மருந்து கொடுத்து, அவரைப் பாலியல் வல்லுறவுக் கொடுமைக்கு உள்ளாக்கிய சம்பவத்தில், தெலுங்கானா மாநிலத்தைச் சேர்ந்த பாஜக தலைவர் மீது 13 ஆண்டுகளுக்குப் பிறகு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.பாஜகவின் தெலுங்கானா மாநில செய்தித் தொடர்பாளராக இருப்பவர் மாதவனேனி ரகுநந்தன் ராவ். இவர் ஒரு வழக்கறிஞர் ஆவார். இந்நிலையில், ஆர்.சி. புரம் பகுதியைச் சேர்ந்த பெண் பத்திரிகையாளர் ஒருவர், தனது கணவர் மீது ஜீவனாம்ச வழக்கு தொடர வேண்டும் என்று ரகுநந்தன் ராவை அணுகியுள்ளார். இதற்காக கடந்த 2007 டிசம்பர் 2-ஆம் தேதி ரகுநந்தனின் வீட்டிற்குச் சென்றுள்ளார்.அப்போது பெண் பத்திரிகையாளருக்கு காபியில் மயக்க மருந்துகலந்து கொடுத்து, அவரை ரகுநந்தன் ராவ் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கி இருக்கிறார். அதனை புகைப்படமும் எடுத் துள்ளார்.இந்த பிரச்சனையில் போலீசார் நடவடிக்கை எடுக்க மறுத்த நிலையில், மனித உரிமை ஆணையத்தின் தலையீட்டைத் தொடர்ந்து, 13 ஆண்டுகளுக்குப் பிறகு, தற்போது வழக்கு பதிவு செய்யப் பட்டுள்ளது.

;