தேசம்

img

உலகிலேயே தொலைத்தொடர்பு அதிகமுறை துண்டிக்கப்பட்ட காஷ்மீர்!

ஸ்ரீநகர்:
மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசானது, காஷ்மீருக்கான மாநில அந்தஸ்தையும், அம்மாநிலத்திற்கு சிறப்பு உரிமைகளை வழங்கும் ‘370’ மற்றும், ‘35ஏ’ சட்டப்பிரிவுகளையும் கடந்த ஆகஸ்ட் 5-ஆம் தேதி நீக்கியது. இந்த நடவடிக்கை காஷ்மீரில் மக்கள் போராட்டங்களைத் தூண்டக்கூடியது என்பதால், ஆகஸ்ட் 4-ஆம் தேதி நள்ளிரவே, தொலைத்தொடர்பு சேவையை முற்றிலுமாக மோடி அரசு துண்டித்தது. தற்போது 72 நாட்களுக்குப் பின்னர், அங்கு தொலைத்தொடர்பு சேவை மீண்டும் செயல்படத் தொடங்கி இருக்கிறது.இந்நிலையில், உலகிலேயே இந்தியாவில்தான்- அதிலும் குறிப்பாக காஷ்மீரில்தான், அதிகமுறை தொலைத்தொடர்பு சேவை முடக்கப்படுவதாக புள்ளி விவரங்கள் வெளியாகியுள்ளன.

2016-ஆம் ஆண்டு முதல் இப்போது வரை ஜம்மு- காஷ்மீரில் 183 முறையும், ராஜஸ்தான் மாநிலத்தில் 43 முறையும் தொலைத்தொடர்பு சேவை துண்டிக்கப்பட்டு இருக்கிறது. 2019-ஆம் ஆண்டு மட்டும்67 முறை ஜம்மு - காஷ்மீரில் தொலைத்தொடர்பு சேவை துண்டிக்கப்பட்டு இருக்கிறது. பொதுப் பாதுகாப்பு மற்றும்முன்னெச்சரிக்கை நட வடிக்கைக்காகவே அதிகமுறை தொலைத் தொடர்பு துண்டிக்கப்பட்டு இருப்பதாகவும், இதில், தேசியப் பாதுகாப்புக்காக 26 முறை துண்டிக்கப்பட்டு இருப்பதாகவும் காரணம் கூறப்பட்டுள்ளது. ஆனால், 108 முறை எந்தக் காரணத்திற்காக முடக்கப்பட்டது என்பதற்கு பதில் இல்லை.ஜம்மு - காஷ்மீரில் புர்ஹான்வானி கொல்லப்பட்டபோது அதிகபட்சமாக 2016 ஜூலை முதல்ஜனவரி 2017 வரை தொலைத் தொடர்புசேவைகள் 6 மாத காலம் துண்டிக்கப்பட்டது குறிப்பிடத் தக்கது. எத்தியோப்பியாவில் 2017 டிசம்பர் தொடங்கி 2018 ஏப்ரல் வரை 110 நாட்கள் மட்டுமே தொலைத்தொடர்பு வசதி முடக்கப்பட்டு இருக்கிறது. அந்நாட்டை விட இந்தியாவில் அதிகமுறை தொலைத்தொடர்பு வசதி முடக்கப்பட்டுள்ளது.

;