சனி, செப்டம்பர் 19, 2020

தேசம்

img

தீக்கதிர் விரைவுச் செய்திகள்

ஹரியானா பாஜக தலைவர் ராஜினாமா!
சண்டிகர்:

ஹரியானாவில் பாஜக தனிப்பெரும் பான்மையுடன் ஆட்சிஅமைக்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. பாஜக மாநிலத் தலைவர் சுபாஷ் பராலாவே தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட ஜனநாயக ஜனதாகட்சி வேட்பாளர் தேவிந் தர் சிங் பாப்லியிடம் 25 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்துள்ளார். இதையடுத்து, தோல்விக்குப் பொறுப்பேற்று, பாஜக தலைவர் சுபாஷ் பராலா தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

காங். முன்னாள் முதல்வர் மீது சிபிஐ வழக்கு
புதுதில்லி:

எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த முன்னாள் முதல் வர்கள், அமைச்சர்கள், முக்கியத் தலைவர்களை முடக்கும் வகையில், அவர்கள் மீது மத்திய பாஜக அரசானது, சிபிஐ, வருமானவரித்துறை மற்றும் அமலாக்கத்துறையை ஏவி பொய் வழக்குகளை போடுவதாக தொடர்ந்து குற்றச்சாட்டுக்கள் இருந்து வருகின்றன. இந் நிலையில், உத்தர்கண்ட் மாநில, காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த முன்னாள் முதல்வர் ஹரிஷ் ராவத்,2016-ஆம் ஆண்டு ஆட்சியைக் காப்பாற்றுவதற்கு குதிரைபேரம் நடத்தியதாக சிபிஐ வழக்கு பதிவுசெய்துள்ளது. 

வாக்குச்சாவடி முகவர் மீது வழக்கு
புனே:

மகாராஷ்டிர மாநிலம் நவ்லேவாடி கிராம வாக்குச் சாவடியில், கடந்த 21-ஆம் தேதி நடைபெற்ற வாக்குப் பதிவின்போது, எந்த பொத்தானை அழுத்தினாலும் பாஜகவுக்கே வாக்குகள் பதிவானதாக குற்றச்சாட்டு எழுந்தது. ஆனால், தேர்தல் நடத்தும் அதிகாரியான கீர்த்தி நலவாடே அதனை மறுத்து விட்டார்.இதனிடையே, மக்களிடம்தவறான மற்றும் பொய்யான தகவலை பரப்பியதாக, தேசியவாத காங்கிரசின் வாக்குச்சாவடி முகவர் தீபக் ரகுநாத் பவார் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

ஆவி, பேயை நிரூபித்தால்  ரூ. 50 ஆயிரம் 
புவனேஸ்வர்:

வட மாநிலங்களில் பில்லி, சூனியம், ஆவி,பேய் போன்ற மூடநம்பிக்கைகளால் மக்கள் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். பின்னர் அவர்கள்அரசிடமும், காவல்துறையிடம் புகார் தெரிவிக்கின் றனர். எனவே மூடநம்பிக்கைக்கு எதிரான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், ஆவி, பேய்இருப்பதை நிரூபிப்பவர் களுக்கு ரூ. 50 ஆயிரம்ரொக்கப்பரிசு வழங்கப் படும் என ஒடிசா மாநிலம் கஞ்சாம் மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
 

;