வெள்ளி, செப்டம்பர் 25, 2020

தேசம்

img

வல்லுறவுக் குற்றத் தலைநகராகும் உ.பி. மாநிலத்தின் ‘உன்னாவ்’

லக்னோ:
பாஜக ஆளும் உத்தரப்பிரதேச மாநிலத்திலுள்ள உன்னாவ் மாவட்டம்,பாலியல் வல்லுறவுக் குற்றங்களின் தலைநகராக உருவெடுத்து வருகிறது.இங்கு 2019 ஜனவரி முதல் நவம்பர் வரையிலான கடந்த 11 மாதங்களில் மட்டும் 86 பாலியல் வல்லுறவுக் குற்றங்கள் அரங்கேறியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.உன்னாவ் மாவட்டத்தின் மக்கள் தொகை 31 லட்சம். மாநிலத் தலைநகரான லக்னோவிலிருந்து 63 கி.மீ தொலைவிலும், கான்பூரிலிருந்து 25 கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ள உன்னாவ் மாவட்டத்தில் பெண் களுக்கு எதிரான பாலியல் துன்புறுத் தல் தொடர்பாக மொத்தம் 185 வழக்குகள் பதிவாகியுள்ளன. இதில், பாலியல்வல்லுறவு வழக்குகள் மட்டும் 86 என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

பாஜக எம்எல்ஏ குல்தீப் சிங் செங்கார் சம்பந்தப்பட்ட கும்பல் வல்லுறவு வழக்கு மற்றும் இரண்டு நாட்களுக்கு முன்பு, ஒரு பெண்ணை தீ வைத்துக் கொன்ற வழக்கு தவிர வேறு பலமுக்கியமான வழக்குகளும் இதில் உள்ளன. இதில் பூர்வாவில் ஒரு பெண்பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டவழக்கில் நவம்பர் 1 ஆம் தேதிஎப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. உன்னாவ் மாவட்டத்தின் அசோகா, அஜ்கெய்ன், மக்கி மற்றும் பங்கர்மாவ்ஆகிய இடங்களில் பாலியல் வல்லுறவு மற்றும் வன்கொடுமை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.இவற்றில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் பெரும்பாலும் கைது செய்யப்படுவதில்லை அல்லது ஜாமீனில் விடுவிக்கப்பட்டு விடுகின்றனர் என்று கூறப்படுகிறது. இதன்மூலம் வல்லுறவுக் குற்றங்களின் தலைநகராக உன் னாவ் உருவெடுத்து வருவதாகவும், உன்னாவ்காவல்துறையினர் அரசியல் செல்வாக்கு பெற்றவர்களுக்கு வேலை செய்வதே இதற்குக் காரணம்என்றும் உள்ளூர்வாசிகள் குற்றம் சாட்டுகின்றனர்.

;