வெள்ளி, ஆகஸ்ட் 14, 2020

தேசம்

img

தாயத்து போட்டாலும் கொரோனா அண்டாதாம்... உ.பி.யில் கடை விரித்த சாமியார் கைது

லக்னோ:
கொரோனாவுக்கு என தனியாகமருந்து எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை. எச்ஐவி-க்கு அளிக்கப் படும் மருந்துகள்தான் தற்போதுபயன்படுத்தப்பட்டு வருகின்றன.ஆனால், ஆர்எஸ்எஸ், இந்துமகாசபை, பாஜக-வைச் சேர்ந்தவர்கள், கோமியம் குடித்தால் கொரோனா குணமாகும் என்று பிரச்சாரம் செய்து வருகின்றனர்.

கோமியம் பார்ட்டியும் நடத்திக் கொண்டிருக்கின்றனர்.இதனிடையே, லக்னோவில் அஹமத் சித்திக் என்பவர், தான்மந்திரித்துக் கொடுக்கும் தாயத்தைக் கட்டிக்கொண்டால், கொரோனா அண்டாது என்று புதிதாக ஒரு வதந்தியைக் கிளப்பிவிட்டு மாட்டிக் கொண்டுள்ளார்.“யாரால் கொரோனா முகமூடி வாங்க முடியவில்லையோ, அவர்கள் அனைவரும் ரூ. 11 கொடுத்துதாயத்தை வாங்கிச் செல்லலாம்” என விளம்பரம் செய்த சித்திக், கடைஒன்றையும் போட்டுள்ளார். இதையடுத்து சித்திக்கை போலீசார் கைது செய்துள்ளனர்.அதாவது, கோமியம் பார்ட்டி நடத்திய பேர்வழிகளைக் கைது செய்யாத உ.பி. பாஜக அரசின் காவல்துறை, தாயத்து விற்ற சித்திக்கை மட்டும் வேகவேகமாக கைது செய்துள்ளது.
 

;