புதன், செப்டம்பர் 23, 2020

தேசம்

img

கோயில் கட்டினால் கொரோனா ஒழிந்துவிடுமென கருதுகிறார்கள் போலும்....

அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கானபூமி பூஜையில் பிரதமர் மோடி கலந்து கொள்வார் என்று செய்தி வந்துள்ள நிலையில், மோடியை தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் மறைமுகமாக விமர்சித்துள்ளார்.‘‘எது முக்கியமானது என்று நாம் கட்டாயம் முடிவு செய்ய வேண்டும். நாம் கொரோனாவிற்கு எதிராக போரில் எப்படி வெற்றி பெறலாம் என்று நினைத்துக் கொண்டிருக்கையில், சிலர் கோவில் கட்டுவதால் கொரோனா ஒழிந்துவிடும் என்று நினைக்கிறார்கள். அதற்கு பின் ஒரு கார
ணம் இருக்கலாம்’’ என்று சாடியுள்ளார்.மேலும், ‘‘கொரோனா வைரஸ் தொற்றால் முடங்கிப்போன பொருளாதாரத்தை எப்படி முன்னேற்றுவது என்பதை பார்ப்பதுதான் எங்களுடைய முன்னுரிமை. அரசு இதில்தான் கவனம்
செலுத்த வேண்டும்’’ என்றும் குறிப்பிட்டுள்ளார்.

;