வியாழன், அக்டோபர் 1, 2020

தேசம்

img

சிவாஜியுடன் மோடியை ஒப்பிட்டு புத்தகமா? சிவசேனா கட்சி கடும் எதிர்ப்பு

மும்பை:
பாஜகவைச் சேர்ந்த ஜெய் பகவான் கோயல் அண்மையில், ‘ஆஜ் கே சிவாஜி: நரேந்திர மோடி’ என்ற தலைப்பில் ஒரு புத்தகத்தை எழுதி வெளியிட்டுள்ளார்.மராட்டிய மன்னர் சத்ரபதி சிவாஜியுடன், பிரதமர் நரேந்திர மோடியை ஒப்பிட்டு எழுதப்பட்டுள்ள இந்த நூலுக்கு சிவசேனா உள்ளிட்ட கட்சி கள் கண்டனம் தெரிவித்துள்ளன. புத்தகத்தையே தடை செய்ய வேண்டும் என்று சிவசேனாவின் மூத்ததலைவர் சஞ்சய் ராவத் போர்க்கொடி உயர்த்தியுள்ளார். “பிரதமர் மோடியை, சத்ரபதி சிவாஜியுடன் ஒப்பிடுவதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது.சத்ரபதி சிவாஜி அவமதிக்கப்பட்டுள்ளார். எனவே இப்புத்தகம் தடை செய்யப்பட வேண்டும்; தவறான புத்தகத்தோடு நெருங்காமல் பாஜக அதிகாரப்பூர்வமாக தள்ளி நிற்கவேண்டும்” என்று ராவத்  கூறியுள்ளார்.மகாராஷ்டிர மன்னர் சிவாஜியின் வழித்தோன்றலும், உதயன்ராஜே போசலேவின் உறவினரும், பாஜக எம்எல்ஏவுமான சிவேந்திர ராஜே போசலேவும், இந்த புத்தகத்தை எதிர்த்துள் ளார்.“எனது கட்சித் தலைவர்கள், தங்களின் தனிப்பட்ட ஆதாயத்திற்காக, எந்தஅளவிற்கும் தரம்தாழத் தயாராக இருப்பதையே இந்த புத்தகம் காட்டுகிறது”என்று கூறியுள்ளார்.காங்கிரஸ், என்சிபி கட்சியினரும் தங்களின் எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.

;