ஞாயிறு, செப்டம்பர் 27, 2020

தேசம்

img

அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் மாபெரும் வெற்றி

தாராள வர்த்தக ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திடாதது

புதுதில்லி, நவ.7- பிராந்திய ஒருங்கிணைந்த பொருளாதார ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திடாதது, விவசாயிகள் மற்றும் தொழிலாளர்களின் போராட்டங் களுக்குக் கிடைத்த வெற்றி என்று அகில இந்திய விவசாயிகள் சங்கம் கூறியுள்ளது. இதுதொடர்பாக சங்கத்தின் தலைவர் டாக்டர் அசோக் தாவ்லே, பொதுச்செயலாளர் ஹன்னன் முல்லா ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கை யில் கூறியிருப்பதாவது: மிகப்பெரிய அளவிலான தாராள  வர்த்தக உடன்பாடாக (mega Free Trade Agreement) வடிவமைக்கப் பட்டுள்ள பிராந்திய ஒருங்கிணைந்த பொருளாதார ஒப்பந்தம் (RCEP-Regional Comprehensive Economic Partnership) தொடர்பாக, ஆசி யான் மற்றும் சீனா, நியூசிலாந்து, ஆஸ்தி ரேலியா, ஜப்பான், தென் கொரியா மற்றும் இந்தியா ஆகிய நாடுகளுக்கு இடையேயான பேச்சுவார்த்தைகள் முடிவுற்று, கையெழுத்திடுவதற்காக இறுதிக்கட்ட பேச்சுவார்த்தைகள் நடந்து கொண்டிருந்தன. இதில் கடைசி நிமிடத்தில் நவம்பர் 4 அன்று இந்தியா  கையெழுத்திடாமல் ஒதுங்கிக்கொண் டது. இது நாட்டின் விவசாயிகள் மற்றும் தொழிலாளர்கள் நாடு முழுதும் மேற்கொண்ட போராட்டங்களுக்குக் கிடைத்தக் குறிப்பிடத்தக்க வெற்றி யாகும்.

இந்த ஒப்பந்தத்தில் இந்தியா கையெ ழுத்திடுவதற்கு எதிராக நாடு முழு வதும் அகில இந்திய விவசாயிகள் சங்கம், அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கம், சிஐடியு, அகில இந்திய அனைத்து விவசாயிகள், சங்க ஒருங்கிணைப்புக் குழு  ஆகிய வற்றுடன் இணைந்து மிகவும் பிரம் மாண்டமான அளவில் கிளர்ச்சிகள் நடத்தியது. பால் பண்ணை விவசாயிகள் தங்கள் மாடுகளை மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களுக்கே இழுத்துச் சென்று தங்கள் எதிர்ப்பினைக் காட்டினார்கள்.  இவ்வாறு விவசாயிகள், தொழிலாளர் கள் நாடு முழுவதும் கிளர்ந்தெழுந்து நவம்பர் 4 அன்று பிரம்மாண்டமான முறையில் போராட்டங்கள் நடத்தி யதும், சமீபத்தில் நடைபெற்ற சட்ட மன்றத் தேர்தல்களில் பாஜகவிற்கு பின்னடைவுகள் ஏற்பட்டிருப்பதும், மத்திய அரசை பின்வாங்க வைத்திருக் கின்றன.

இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட வேண்டும் என்று பிரதமர் மோடி பல நாட்டின் தலைவர்களிடம் நவம்பர்  4-க்கு முன்பு கெஞ்சிக் கேட்டுக் கொண்டி ருந்தவர்தான்.  அதன்மூலம் இந்தியா வின் சந்தையை அந்நிய நாடுகளுக்கு தாரை வார்த்திட முயற்சிகள் மேற்கொண்டிருந்தவர்தான். இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்தி டுவதற்கு முன்பு, அதனால் ஏற்படும் தாக்கம் குறித்து அரசு ஒரு வெள்ளை அறிக்கை தாக்கல் செய்திட வேண்டும் என்று அகில இந்திய விவசாயிகள் சங்கம் வலியுறுத்தியது. இந்த ஒப் பந்தம் குறித்து நாடாளுமன்றத்தின் ஆய்வுக்கு உட்படுத்திட வேண்டும்; மாநிலங்களின் கருத்துக்களையும் கேட்டறிந்திட வேண்டும்;  இதுதொடர்பாக உடனடியாக நடவடிக்கைகள் எடுத்திட வேண்டும் என்றும் வலியுறுத்தியது. அது இப்போதும் செய்யப்பட வேண்டும். பிராந்திய ஒருங்கிணைந்த பொருளாதார ஒப்பந்தத்தில் இடம் பெற்றுள்ள வாசகங்கள், இந்தியாவின் இறுதி முடிவு இன்னும் தீர்க்கப்படாத பிரச்சனைகள் மீது திருப்திகரமான தீர்மானம் நிறைவேற்றப்படுவதைச் சார்ந்திருக்கிறது என்று தெளிவாகக் குறிப்பிடுகிறது. பிரதமர் மோடிக்கு நாட்டு மக்களின் நலன்களை விட கார்ப்ப ரேட்டுகள் மற்றும் வர்த்தக நிறுவனங் களின் நலன்கள்தான் முக்கியம்  என்பது அனைவரும் அறிந்ததேயாகும். பிரதமர் மோடி மற்றும் பாஜக அரசாங் கத்தின் கடந்த கால வரலாறு அவர்கள் தங்கள் உறுதிமொழிகளுக்குத் துரோகம் இழைக்கத்தயங்கமாட் டார்கள் என்பதேயாகும். எனவே இதில் கையெழுத்திடுவதற்குத் தேவையான நடவடிக்கைகளில் மீண்டும் ஈடுபடுவார்கள். 

எனவே ஆட்சியாளர்களின் நடவடிக்கைகள் குறித்து, அனைத்து மக்களும் விழிப்புடன் இருந்திட வேண்டும் என்றும், இந்த ஒப்பந்தத்தின் தொழிலாளர் விரோத, விவசாயிகள் விரோத அம்சங்களையும், இந்த ஒப்பந்தம் உள்நாட்டு மற்றும் வெளி நாட்டுக் கார்ப்பரேட்டுகளின் நலன் களுக்கானவை என்பதையும் மக்கள் மத்தியில் எடுத்துச் சென்றிட தொடர் இயக்கங்களை நடத்திட வேண்டும் என்றும் அகில இந்திய விவசாயிகள் சங்கம் அழைப்பு விடுக்கிறது. இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. (ந.நி.)
 

;