திங்கள், அக்டோபர் 26, 2020

தேசம்

img

பொதுச் செயலாளர் மேசையிலிருந்து...

சீனா நமது பகுதியில் ஊடுருவ வில்லை என பிரதமர் மோடி பேசி யது அந்த பொருளில் அல்ல  என இப்பொழுது அறிக்கைவிடப் பட்டுள்ளது. திரு. மோடி தான் பேசு வதற்கு முன்பு என்ன பேச வேண்டும் என்பது குறித்து தெளிவுபடுத்திக் கொள்ள வேண்டும். இப்படி அடிக்கடி மாற்றிப் பேசுவது என்பது எதிர்க்கட்சி களை தவறாக வழிநடத்தவும் சர்வதேச அரங்கில் நமது ராஜிய நிலையை பலவீனமாக்குவதற்கான முயற்சியாகவே அமையும்.

வெள்ளி மாலை நடந்த அனைத்து கட்சி கூட்டத் தில் தான் அந்த அர்த்தத்தில் பேச வில்லை என வகைப்படுத்தும் பிரத மர் வேறு என்னென்ன கருத்து களை பேசினார்? தேசத்திற்கு மிக மிக முக்கியமான பிரச்சனையில் இவ் வளவு வேகமாக தனது கூற்றை பிர தமர் மாற்றிக்கொண்டால், மேற்படி கூட்டத்தில் சொல்லப்பட்டதில் எதையாவது நாம் நம்பமுடியுமா?

பிரதமரின் கூற்றுக்கு மற்ற வர்கள் விஷமத்தனமான விளக்க ங்களை தருகின்றனரா? குழப்ப த்தை உருவாக்குவது யார்? தெளி வற்ற கூற்றுகளை முன்வைப்பது யார்? தான் கூறியதில் தானே முரண்படுவது யார்? பிரதமர் தனக்கு தானே முரண்பட்டது மட்டுமல்ல; அர சாங்கத்தின் ஏனைய பிரிவுகளும் இராணுவமும் கூறியதற்கும் முரண்பட்டு பேசியுள்ளார்.

இந்த தருணத்தில் நமது தேச மும் மக்களும் ஒன்றுபட்டு நிற்க  வேண்டும். பிளவுவாத உணர்ச்சி களோ அல்லது பொய்யான செய்தி களோ உலாவருவதை அரசாங்கம் உறுதியாக தடுக்க வேண்டும்.  45 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா - சீனா மோதல் இவ்வளவு மோசமாக உருவான பின்னணியில் ஏப்ரல் மற்றும் ஜூன் மாதத்திற்கு இடையே என்ன நிகழ்வுகள் நடந்தன என்பது குறித்த அரசின் விளக்கத்திற்காக நாம் இன்னும் காத்துக் கொண்டிருக் கிறோம்.

நமது வீரர்களின் விலை மதிப்பற்ற உயிர்களை பாதுகாக்க என்ன செய்திருக்க முடியும் என்பது தான் நாம் ஆழமாக பரிசீலனை செய்ய வேண்டிய அம்சமாகும். 2020 ஏப்ரல்- ஜூன் மாதங்களுக்கு இடையே என்ன நடந்தது என்பது நமக்கு விளக்கப்படும் என நாம் காத்திருந்தோம். அனைத்துக் கட்சி கூட்டத்தில் அது பற்றி எதுவும் தெரி விக்கப்படவில்லை.

https://www.facebook.com/ComradeSRY/
https://twitter.com/SitaramYechury

;