திங்கள், அக்டோபர் 26, 2020

தேசம்

img

பொதுச் செயலாளர் மேசையிலிருந்து...

மோடியும் அவரது அரசாங்கமும் பொருளாதாரத்தை யும் மக்களின் உயிரையும் வாழ்வாதாரத்தையும் முற்றிலுமாக அழித்துவிட்டனர். தொலைக்காட்சிகளில் மோடி மயிலுக்கு உணவு அளிக்கலாம்; ஆனால் தேசத்தின் பல பகுதிகளில் கோடிக்கணக்கான மக்கள் பட்டினியில் வாடிக் கொண்டுள்ளனர்.

                             *************

பிரதமர் மோடியின் திட்டமிடப்படாத ‘தான்தோன்றித்தன மான’ - முன் தயாரிப்பு இல்லாத ஊரடங்கு காரணமாக லட்சக்கணக்கான புலம்பெயர் தொழிலாளர்கள் தமது சொந்த மாநிலங்களுக்கு ஆயிரக்கணக்கான மைல்கள் நடந்தே சென்றனர். பலர் இறந்தனர். எத்தனை பேர் சொந்த மாநிலங்களுக்கு திரும்பினார்கள்/ இறந்தவர்கள் எண்ணிக்கை எவ்வளவு எனும் விவரங்கள் தன்னிடம் இல்லை என மோடி அரசாங்கம் இப்பொழுது சொல்கிறது. வெட்கக்கேடு! பொறுப்பற்ற தன்மை!!

                             *************

புலம்பெயர் தொழிலாளர் பற்றிய விவரங்கள் தன்னிடம் இல்லை என்றும் பொய்யான செய்திகள் காரணமாகவே அவர்கள் தமது சொந்த ஊருக்கு பயணித்தனர் எனவும் மத்திய அரசாங்கம் சொல்கிறது. கற்பனைக்கும் எட்டாத கொடுமை இது. அரசாங்கத்துக்கு துளி கூட மனிதாபிமானம் இல்லை!கடந்த ஆறு மாதங்களாக நிவாரணம் அளிக்கவில்லை! பாதிக்கப்பட்டவர்களின் மறுவாழ்விற்கு எதுவும் செய்யப்படவில்லை. இப்பொழுது பொய்களைச் சொல்லி தனது பொறுப்பைத் தட்டிக் கழிக்க பார்க்கிறது மத்திய அரசாங்கம். இதற்கு பதில் சொல்லியே தீரவேண்டும்.

                             *************

விவசாயத்தை பன்னாட்டு விவசாய நிறுவனங்களிடம் தாரைவார்க்கும் அவசரச் சட்டங்களை உடனே திரும்பப் பெறுங்கள். இந்த அவசரச் சட்டங்கள் அன்னமிடும் கைகளான விவசாயிகளின் வாழ்வை மேலும் நாசமாக்கும். இந்தியாவின் உணவுப் பாதுகாப்பை அழிக்கும்.  மோடி அரசாங்கத்தின் வெற்று வாய்ச்சவடால் மற்றும் பொய் உரைகள் உண்மை நிலையை மறைக்க முடியாது.

சமூக வலைத்தளங்களில் பார்க்க... 

முகநூல்  : https://www.facebook.com/ComradeSRY/

டுவிட்டர் :  https://twitter.com/SitaramYechury

;