தேசம்

img

கர்நாடக பாஜக அரசின் 2200 கோடி ரூபாய் ஊழல்... கொரோனா நிதியையும் விட்டுவைக்கவில்லை...

பெங்களூரு:
கர்நாடக மாநிலத்தில், கொரோனா தடுப்புப் பணிக்காக ஒதுக்கப்பட்ட நிதியில் ரூ.2 ஆயிரத்து 200 கோடி ரூபாய்அளவிற்கு ஊழல் நடந்திருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதுதொடர்பாக நீதிமன்றம் தலையிட்டு விசாரணை நடத்த வேண்டும் என்றும் கோரிக்கைகளும் எழுந்துள்ளன.இதுகுறித்து, காங்கிரஸ்முன்னாள் முதல்வரும், தற்போதைய கர்நாடக சட்டப் பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான சித்தராமையா செய்தியாளர்களிடம் கூறியிருப்பதாவது:

சுகாதார செயலாளரிடமிருந்து பெறப்பட்ட தகவல்களின்அடிப்படையில், தனிநபர் பாதுகாப்புக் கருவிகள் (பிபிஇ), முகமூடிகள், அறுவைச் சிகிச்சை கையுறைகள், ஆக்ஸிஜன் சிலிண்டர்கள், வெண்டிலேட்டர்கள், சானிடைசர்கள் மற்றும் பிற அத்தியாவசிய பொருட்களை வாங்குவதற்கு அரசு ரூ.4 ஆயிரத்து 147 கோடியை செலவிட்டுள்ளது. இதில்தான் ரூ. 2 ஆயிரத்து200 கோடி மக்கள் பணம் சூறையாடப்பட்டு உள்ளது.வெண்டிலேட்டருக்கு ரூ. 4 லட்சம் செலவாகும். ஆனால் அரசாங்கம் ரூ. 12 லட்சம் கொடுத்துள்ளது. 2020 மார்ச் 9 அன்றைய நிலவரப்படி, மகாராஷ்டிராவைச் சேர்ந்த பாஸ்டிசர்ஜ் என்ற நிறுவனம் ஒருபிபிஇ கிட்டு-க்கு 330 ரூபாய் தான் விலை நிர்ணயித்தது. ஆனால், சீனாவிலிருந்து 2 ஆயிரத்து 117 ரூபாய் விலைக்கு, 3 லட்சம் பிபிஇ கிட்-களை எடியூரப்பா அரசு இறக்குமதி செய்துள்ளது. சுமார் 7 மடங்கு கூடுதல் விலைகொடுத்து பிபிஇ கிட்-கள்இறக்குமதி செய்யப்பட் டுள்ளன.ஒட்டுமொத்தமாக, ரூ.2ஆயிரத்து 100 கோடி மதிப்பிலான உபகரணங்களை 4 ஆயிரத்து 147 கோடி கொடுத்து கர் நாடக அரசு வாங்கியுள்ளது. இதன்மூலம் ரூ. 2200 கோடி அளவிற்கு எடியூரப்பா அரசுமக்கள் பணத்தை சூறையாடியுள்ளது. எனவே, இந்த ஊழல்முறைகேடு தொடர்பாக, நீதிவிசாரணை நடத்தப்பட வேண்டும். இவ்வாறு சித்தராமையா கூறியுள்ளார்.

;