புதன், செப்டம்பர் 23, 2020

தேசம்

img

மேலும் 1,300 பேருக்கு தொற்று... ஒடிசாவில் தீவிரமடையும் கொரோனா...  

புவனேஷ்வர்
நாட்டின் கிழக்கு பகுதி மாநிலமான ஒடிசாவில் கடந்த ஒரு வாரமாக கொரோனா பரவல் தீவிரமடைந்து வருகிறது. முக்கிய நகரங்களில் பரவலான வேகத்தில் பரவி வரும் கொரோனா வைரஸ் இன்று (செவ்வாய்) ஒரே நாளில்  1,384 பேரை மருத்துவமனைக்கு அனுப்பியுள்ளது.  

இதன்மூலம் மாநிலத்தின் மொத்த கொரோனா பாதிப்பு 37,684 ஆக உயர்ந்துள்ளது.  மேலும் 9 பேர்  பலியாகியுள்ள நிலையில், மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 200-யை (216) தாண்டியுள்ளது. 23,073 பேர் இதுவரை குணமடைந்துள்ளனர். இன்னும் 14,350 பேர் சிகிச்சையில் உள்ளனர். 

ஒடிசாவில் கடந்த 3 மாதமாக கொரோனா பரவல் ஓரளவு கட்டுக்குள் தான் இருந்தது. மத்திய அரசு செயல்படுத்திய தளர்வுகளுக்கு பின்பு கொரோனா அம்மாநிலத்தில் புதிய அவதாரம் எடுத்துள்ளது.    

;